உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழஞ்சலி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி பொருள்புரிய வைக்கின்ற புதியதோர் தத்துவம் நீ! ஒளியிருந்த முட்டைக்குள், உருவாகி நின்ற கருவுக்குள் நித்தியத் தீனியாகி, நிர்மல வெளியாகி, நின்ற சக்திக்கு நீ தானே முதல்வித்து! புரியவில்லையே! கேட்டது நீர்வீழ்ச்சி! நிமிர்ந்த பொருளிலெல்லாம் நீயாகி இருக்கின்றாய். நின்ற பொருளுக்கும் நீயாகி நிற்கின்றாய்! நிற்காத பொருளுக்கும் நீ ஆகி நிற்கின்றாய். உன்னைப் படைத்தவன் நீ! உன்னில் இருப்பவன் நீ! புரியவில்லையே! மீண்டும் நீர்வீழ்ச்சி கேட்டது. இன்னுமா புரியவில்லை! அறிவு ஒரு குளுமையான அந்தி! இரவுக்கும் பகலுக்கும் இடையிலே இருக்கின்ற குழந்தை அது! அந்தியைப் போல, குளிர்கின்ற அறிவு நீ! ஒளியில் அந்தி! ஒலியில் யாழ்! காற்றில் தென்றல்! 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/36&oldid=863590" இலிருந்து மீள்விக்கப்பட்டது