பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்


றனவா? என்று கவனிப்பதை அவர் தமது வேலையாகக் கொண்டார். அவர் தமது அன்பினாலும், விடா முயற்சியினாலும் தம்முடைய புகழ்மணம் சாந்திநிகேதனம் முழுவதிலும் கமழும்படி செய்திருந்ததைக் கண்டேன்.

சி.எஃப். ஆண்டரூசும் அங்கே இருந்தார். பியர்சனும் இருந்தார். வங்காளி ஆசிரியர்களில் ஜகதான்ந்த பாபு, நோயால் பாபு, சந்தோஷ்பாபு, க்ஷிதி மோகன் பாபு, நாகேன் பாபு, சரத்பாபு, காளி பாபு ஆகியவர்களுடன் ஓரளவுக்கு நெருங்கிய பழக்கம் எங்களுக்கு ஏற்பட்டது.

என்னுடைய வழக்கப்படி அங்கே இருந்த ஆசிரியர்களுடனும், மாணவர்களுடனும் நான் சீக்கிரத்தில் ஒன்றிப் போய் விட்டேன். அவரவர்களின் காரியங்களை அவர்களே செய்து கொள்ளுவதைக் குறித்து அவர்களுடன் விவாதித்தேன். ஆசிரியர்களுக்கு ஒரு யோசனை கூறினேன்.

“சம்பளத்திற்கு வைத்திருக்கும் சமையற்காரர்களை அனுப்பிவிட்டு, ஆசிரியர்களும், மாணவர்களுமே தங்கள் உணவைச் சமைத்துக் கொள்ளுவதானால் சிறுவர்களின் உடலுக்கும் ஒழுக்கத்துக்கும் ஏற்ற வகையில் சமையலறையை நிர்வகிக்க ஆசிரியர்களால் முடியும் என்றேன். இது, தங்கள் காரியங்களைத் தாங்களே செய்துகொள்ள வேண்டும் என்பதில் மாணவருக்கு ஓர் அனுபவப் பாடமாகவும் இருக்கும் என்றேன்.

ஆசிரியர்களில் இரண்டொருவர், அது ஆகாத காரியம் என்று தலையை அசைத்தார்கள். சிலர், என் யோசனையைப் பலமாக ஆதரித்தார்கள். சிறுவர்களும் அதை வரவேற்றனர். புதுமையான காரியங்களில் ஈடுபடும் சிறுவர்களுக்கு