பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 7t

ஆல்போல் வேர் கொண்ட அன்பு, அதனோடு தரமிக்க அறிவும் ஒருவருக்கு அமைதல் வேண்டும்.

அந்த அறிவு, மக்கள் திலகத்திடம் இருந்தது. அதனால் தான்், ஒரு குறிஞ்சி மலர்க் காலத்திற்குத் தமிழ்க் குவலயத்தை அவரால் அரசோச்சிட முடிந்தது:

புள்ளிக்குப் பரிமாணம் இல்லையென்று ஜியோ மெண்டரி கூறுகிறது! ஆனால், கணித மேதைகள் அதை எப்படிக் காட்டுகிறார்கள் தெரியுமா?

இரண்டு கோடுகளைக் குறுக்கே சந்திக்கும்படிப் போட்டு, அவை சந்திக்கும் இடமே புள்ளி என்பார்கள்!

மிக நுட்பமான ஒன்றைத் திட்பமான சூழ்நிலைகளைக் காட்டிப் புலப்படுத்த வேண்டும். அந்த திட்ட அறிவு, பொன்மனச் செம்மலுக்குத் தனித்திறனாக அமைந்தது!

அதனால்தான்், அண்ணா அவர்கள் திருப்பெயரைத் தனது கட்சிக்குச் சூட்டினார்! அதன் கொடியில் அண்ணா உருவப் படத்தை நடுபாகத்திலே சின்னமாகப் பொறித்தார்: தான்் மேடையேறிப் பேசும் ஒவ்வொரு கூட்டத்தின் முடி விலும், திருக்கோவில் பக்தர்களைப்போல ‘அண்ணா நாமம் வாழ்க!” என்று கூறி முடிப்பார்!

A Man reaches his full highlight only, through Compulsions, Responsibilities and Suffering (Hega;)

'காரியப் பொறுப்பு, துன்பம், அவசியம், இவைகள் வாயிலாகவே ஒரு மனிதன் தனது முழுமையான உணர்ச்சியை அடைகின்றான்' என்ற, ஆங்கிலப் புலவன் ஹெகல் உணர்ச்சிக்கு வடிவும் தந்து, தமிழ்நாட்டில், தான்் துவங்கும் காரியப் பொறுப்பையும் நன்கு உணர்ந்து சிந்தித்துச் செயலாற்றிய செயற்கரிய செயல் செய்தவர் புரட்சித் தல்ைவர் - சிந்தனை வீரர் எம்.ஜி.ஆர்.

"Without adventure civilization is in full decay" (White head)