உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவி பாடுவான் பரிதாபப் படுவான் O தை பிறக்கத்தான் செய்கிறது... ஆனாலும் அவனிடம் நிற்காமல் அது பறக்கத்தான் செய்கிறது இந்தத் தை..... வாடிப் பட்டியில் நிற்காத வைகை எக்ஸ்பிரசா என்ன? பாவம் அவனிடம் நிற்காமல் பறக்கத்தான் செய்கிறது! எத்தனையோ தை பிறக்கத்தான் செய்கிறது அவன் முகத்தில் புன்னகைப் பொங்கல் பொங்கவில்லையே! அவன் இல்லத்தில் அரிசிப் பொங்கல் இல்லையே! அரிசியின் தரிசனத்துக்காக இந்த நந்தன் இன்னும் எத்தனை தைதான் காத்திருப்பதோ? இன்னும் எவ்வளவு காலம்தான் தைமகளின் சுயம் வரத்தில் பசப்பல் வேடம் போடும் நிலப்பிரபுத்துவக் கலிபுருடன் மாலை சூட்டி மதிக்கப் பெறுவதோ? கோடையும் வசந்தமும் 0 77