உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரும் தேரும் "பங்களா வாசலில் பல மணி நேரமாய்க் கால்கடுக்கக் காத்திருக்கிறேன் நான் பால்காரக் கார்மேகம் உங்கள் பிள்ளை காரை ஒட்டிக் கொன்று விட்டார் கன்றை எனக்கோர் வழிகேட்கத்தான் வந்தேன்' 'யாரடா இவனை உள்ளே விட்டது மனு நீதிச் சோழனின் மகிமை பற்றி நீதிபதி தலைமையில் நீண்ட சிறப்புரையாற்றப் போக வேண்டும் பொழுது போய்க் கொண்டுள்ளதே!' 136 0 மீரா