பக்கம்:பூ மரங்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா சிறந்த இலக்கிய நூல்களேத் தயாரிப்பதற்கும், தயாரிப்பை ஊக்குவிப்பதற்கும், அவ்வகையான இலக்கியத்தை மக்களுக்கு மலிவாகக் கிடைக்கச் செய்யும் நோக்கத்துடனும், நேஷனல் புக் டிரஸ்ட், 1957-ல் மத்திய கல்வி இலாகாவின் கீழ், தன் உரிமை பெற்ற நிறுவனமாக ஏற்படுத்தப்பட்டது. சில தேர்ந்தெடுத்த துறைகளில், இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் நூல்களே வெளியிடுவது தவிர புத்தகக் காட்சி களுக்கு வகை செய்யவும் மற்றும் எழுதுதல், மொழிபெயர்த்தல், வெளியிடுதல், விநியோகம் செய்தல் ஆகியவற்றின் பிரச்னைகள் குறித்து விவாத அரங்குகளுக்கு ஏற்பாடு செய்து இதன் மூலம் மேலும் அதிகமான மக்களுக்குப் புத்தக உணர்வை உண்டாக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதும் இந்த ஸ்தாபனத்தின் குறிக்கோளாகும். இந்தப் பொறுப்புக்குழு இதுவரை 375க்கும் மேற்பட்ட தலைப்புகளில், பல இந்திய மொழிகளில் நூல்களே வெளியிட்டு இருக்கிறது. இதன் தற்கால வெளியீட்டுத் திட்டத்தின்படி அடி யிற்காணும் நூல்கள் தொடர்ந்து வெளியிடப்படும். 1. இந்தியா-நாடும் மக்களும்: சாதாரண எழுத்தறிவு பெற்ற மக்களுக்கும், தனித் திறமை பெருதவர்களுக்கும், இந் நாட்டைப் பற்றிய எல்லா விவரங்களேயும் தெரிவிப்பதுதான் இந்தத் தொடரின் நோக்கமாகும். 2. தேசிய வரலாறு (சான்ருேர் - மேன்மக்கள் வரலாறு): பல்வேறு துறைகளிலும் மிகச்சிறந்த திறலாளர்களாகத் திகழ்ந்த மேன்மை பொருந்திய மக்களின் வாழ்க்கை வரலாறுகள் சுமார் 100 புத்தகங்களில் வழங்குவது, இந்தத் தொடரின் செயல் கோக்கமாகும். 3. மக்களுக்காக இயல் நூல்: விஞ்ஞான வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் விளக்கவும் மற்றும் மனிதனின் தினசரி வாழ்வில் நூலியலின் முக்கியத்துவத்தையும் பொதுமக்களுக்கு உணர்த்தவும் இந்தத் தொடர் உதவியாக இருக்கும். 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/218&oldid=835933" இலிருந்து மீள்விக்கப்பட்டது