உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 கவிச்சக்கரவர்த்தி கம்பர் தாலியைக் (1) கழுத் தில் நாண் (2) மங்கலத்தாலி (3) திரு என்று குறிப்பிடுகிருர். இன்றும் திருப்பூட்டல் என்னும் வழக்கு செட்டிநாட்டிலும் திருக்கல்யாணம் என் னும் வழக்கு எங்கும் இருத்தல் கருதத்தக்கது. இனி, தஞ்சைவாணன் கோவைக்கு உரை வரைந்த சொக்கப்ப நாவலர் (18-ஆம் நூற்ருண்டு) உரையால் விளங்கும் சிறந்த குறிப்பு ஒன்று உண்டு. அக்குறிப்புரைக்கும் உ ைர ப் பகு தி வருமாறு: 'உடன்போய்த் தன் ஊரின் கண்ணே வரை தலும், மீண்டுவந்து தன்மனையின் கண்ணே வரை தலும் அந்தணர் சான்ருேர் முன்னிட்டுத் தாய்,தமர் அறிய மனச்சடங்கின் முறையே முடியாமையால் அவை இரண்டும் மன மாகா, அஃது என்னை எனில், உலகியலில் தாய், தமர் அறியாது, மனச் சடங்கும் இன்றி, ஒருவன் உரிமை கருதித் தாலி கட்டும் மணம் மனம் என்று உலகின் கண் உள்ளார் கைக்கொள்ளார்; அவர்க்கே மீண்டும் மணச் சடங்குடனே மணமுடிப்பர்; ஆதலால், அங் தனர் முதலாயினரை முன்னிட்டு அவன் மனையில் மணச்சடங்குடனே முடித்தலின் இதுவே மணமா யினவாறு உணர்க.” இப்பகுதியால் எவ்வாறு ஓரளவு சடங்குகற்றப் பிற்காலத் தமிழர் திருமணம் இன்னும் பிற்காலத் தில் சடங்குடையதாயிற்று என்பது விளங்கும். இனி, எட்கர் தர்ஸ்டன் வரைந்துள்ள Castes and Tribes என்னும் தொகுதியால் தெரிவன :