பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

A

abacterial : நுண்ணுயிரற்ற ; பாக்டீரியா சாரா வீக்கம் : பாக்டீரியாவினால் உண்டாகாத, குறுகிய கால வீக்கத்திற்கான சூழ்நிலையைக் குறிக்கும் சொல்.

abandon : தங்குதடையிலா மனப் பான்மை; கவலையிலா மனநிலை; உதறித்தள்ளு :

abdomen : வயிறு; அடிவயிறு; அகடு; உதரம் : நெஞ்சுக் கூட்டினை அடுத்துக் கீழே உள்ள மிகப் பெரிய உடல் உட்குழிவு. இதனை ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத்திரையானது நெஞ்சுக் கூட்டிலிருந்து பிரிக்கிறது. இது பெரும்பாலும் தசையினாலும், தசைநார் சூழ்ந்த தசைப்பட்டையாலும் சூழப்பட்டுள்ளது. எனவே, இது தனது வடிவளவையும் வடிவத்தையும் மாற்றிக் கொள்ளும் தன்மையுடைய தாகும். இது, அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப்பை (வபை) மூலம் உள்வரியிடப்பட்டுள்ளது. முனைப்பான அடிவயிறு இருக்குமாயின் அதனை உடனடியாக அறுவைச் சிகிச்சைமூலம் சீர்படுத்த வேண்டும். தொங்கலான அடிவயிறு இருக்குமாயின், அதன் முன்புறச் சுவர் சற்றுத் தளர்ச்சியாக அமைந்திருக்கும். இதனால், அது பூப்பு மென்மைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும். படகு வடிவ அடிவயிறு முன்புறச்சுவர் உட்குழிவுடையதாகும்.

abdominal : அடிவயிறு : அடிவயற்றைச் சார்ந்த. நுரையீரல்களுக்குள் செல்லும் காற்றின் அளவையும், அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் காற்றின் அளவையும் அதிகரிப்பதற்காக, ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத் திரை (உந்து சவ்வு ) யையும், அடிவயிற்றுத் தசைகளையும் வழக்கத்திற்கு மிகுதியாகப் பயன்படுத்திச் சுவாசித்தல். உடற்பயிற்சிகள் மூலம் வேண்டுமென்றே இவ்வாறு செய்யலாம். நோயின் போது இவ்வாறு செய்தால், அது பற்றாக்குறை ஆக்சிஜனூட்டத்தை ஈடுசெய்கிறது. குதவாயின் அடிவயிற்று அறுவைச் சிகிச்சையை ஒரே சமயத்தில் இரு அறுவை மருத்துவர்கள் செய்கிறார்கள். அடிவயிற்று அறுவைச் சிகிச்சை மூலம் குதவாயை அசையும்படி செய்கிறார்கள். குடலை இரண்டாகப் பிளந்து கட்டியின் மையத்தை நோக்கி அமைக்கிறார்கள். கட்டி மையம் நோக்கிய முனை நிரந்தரப் பெருங்குடல் முனையாக வெளிக்கொணரப்படுகிறது. கட்டியை உடையமையத்திலிருந்து மிகவும் விலகிய குடலை ஆசன வாயுடன் சேர்த்துத் துண்