உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ο இன்னொருவன் வீட்டு இளமயிலைத் தூக்கிப்போய் பொன்விலங்கு போட்டுப் போகத்துக் காளாக்க ஏங்குகிற பாம்புகள் இராவணப் பாம்புகள்..... வேடம் புனைந்து வேண்டியவர் போல் என்றும் கூட இருந்து குழிபறிக்கத் திட்டமிடும் கொலைகாரப் பாம்புகள் குடிலப் பாம்புகள்.... அரசியலில் சூதை அலங்காரக் கலையாக்கி தருமத்தை விலையாக்கும் சண்டாளப் பாம்புகள் சகுனிப் பாம்புகள்.... வட்டிக்கு மேல் வட்டி வாங்கி ஏழைகளை அட்டையென உறிஞ்சி அன்றன்று கொல்லுகிற சதிகாரப் பாம்புகள் 'ஷைலக்' பாம்புகள்.... ஒற்றுமைப் பண்பாட்டை உலகெங்கும் இசைக்கின்ற உன்னதப் பறவையினை கோடையும் வசந்தமும் C 53