இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கணக்காய்க் கொத்திப் போகப் பறந்து வரும் கடன் காரப் பருந்து. Ο எவனோ காலத் தேனடையைக் கசக்கிப் பிழிந்தான் நாவில் விழுந்ததோர் தேன்துளி; அதனை மணநாள் என்று மகிழ்ந்து சொல்கிறோம் எவனோ காலக் கடலைக் கடைந்தான் ஆல கால நஞ்சின் ஒருதுளி இதழின் நுனியில் பட்டது. அதனைப் பிணநாள் என்று பேசுகின்றோம். Ο நாள் - காலம் எழுதிய கவிதைத் தொகுப்பின் பளபளக் கின்ற பக்கம். சாவின் சந்நிதானத்தில் சஞ்சல வேர்கொண்ட உடற்கொடி உதிர்க்கும் ஒருமலர். இனிக்கும் உயிர்க் கரும்பதனைக் கணுத்தொறும் கணுத்தொறும் அறுக்கும் கொடுவாள். யுகம்பசி கொண்டு, வெட்டி விழுங்கும் ரொட்டித் துண்டு. இரவும் பகலும் எதிரெதிர் ஆடும் கிளியந் தட்டு, கிழமை வீரர் வலைக்குள் போடும் கூடைப் பந்து 44 0 மீரா