இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கடைசிக் கணத்திலும் கண்முன் நிறுத்திப் பகத்சிங் பார்த்துப் பரவசப் பட்ட அற்புத விடியலை அழைத்து வந்தது எந்த நாளோ அந்த நாள் இது. முற்றிப் படர்ந்த முட்காட்டை எரித்து விளைந்த மூங்கிலை வீரமாய்த் துளைத்து மூச்சுக் காற்றை மோகித்து நுழைத்து புரட்சிப் புல்லாங் குழலில் பூபாளம் இசைத்தது எந்த நாளோ அந்த நாள் இது. இதந்தரும் இந்தச் சுதந்திர நாளைச் சொந்தம் கொண்டாடத் தந்த பூமியைத் தமிழால் வணங்குவோம். மதுரை வானொலியில் வாசித்த சுதந்திரதினத் தலைமைக் கவிதையின் ஒரு பகுதி. 82 0 மீரா