இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோணல் கருத்துரைத்த குரல் வளையில் கைவைத்தார் சகல துறைகளிலும் சமத்துவம் பெற்றின்று அகிலம் வியக்கின்ற அற்புதமாய் ஆனார்: நாமோ விடுதலை மேடையிலே வெள்ளிவிழாக் கண்டும் பெண் விடுதலையை அரங்கேற்றும் வீரமின்னும் பெறவில்லை பாரதத்தை முன்னேற்றப் பாதையிலே மெதுவாகப் பூ ரதத்தைப் போல் ஒட்டும் பொறுப்பில் இருந்தவர் ஒர் பெண் என்று எண்ணுகையில் பேரின்பம் தோன்றிடல்ாம் மண் என்றும் மரம் என்றும் மங்கையரைப் புறக்கணித்த காலம் கழிந்த தென்றும் கருதலாம்; எனினுமிங்கே கோலமிடல் இல்லத்தைக் கூட்டல் துணிதுவைத்தல் கையலுக்கும் வேலைகளைக் கவனித்தல் என்றிது போல் மையலுக்கும் சமையலுக்கும் மட்டும் இருக்குமொரு கோடையும் வசந்தமும் O. 103