உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறப்போர் அண்ணல் பாராளுமன்றத்தின் ஆட்சிக்குக் கட்டுப்பட வேண்டுமென்றும் வேண்டியிருந்தனர். அந்த விண்ணப் பத்தை அவையின் முன் வைத்து, ஆல்பி மார்லி பிரபு பேசும்பொழுது, தம்மிடத்தில் இரு சென்னை வாசிகள் எழுதிய கடிதங்கள் இருப்பதாக எடுத்துரைத்தார். அக்கடிதங்களை எழுதியவர்கள் சிறந்த கல்வியறிவு பெற்றவர்களென்றும் தங்கள் உள்ளத்தில் தோன்றிய உண்மையான கருத்துக்களைப் பிரபுக்கள் சபையில் உள்ள எந்த ஒர் ஆங்கிலேயருக்கும் சற்றும் இளைக்காத வகையில் குற்றமற்ற ஆங்கிலத்தில் வெளியிடும் ஆற்றலுடையவர்களென்றும் குறிப்பிட்டார். மேலும் பேசுகையில், அவர் தம் மிடமுள்ள அவ்விரு கடிதங்களில் முதன்மையானது சென்னையிலிருந்து லட்சுமி நரசிம்முலு செட்டியார் விடுத்த கடிதம் என்றும்,1853-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 28-ஆம் தேதி எழுதியிருந்த அக்கடிதத்தில், இந்திய மக்கள் சார்பில் கூறப்பட்டுள்ள புகார்களை ஆராய ஒர் ஆராய்ச்சிக் குழு அமைக்கப்படுமானல், நிச்சயமாக அந்ததப் புகார்களின் உண்மையை எடுத்து நிலைநாட்ட முடியும். நாங்கள் கொடுத்துள்ள இருந்திருக்கிறோம் ஆனல், நாங்கள் சொல்லியுள்ள அளவிற்குக் குறைபாடுகள் அஞ்சத்தக்கனதான். ஒர் ஆராய்ச்சிக் குழு நியமிக்கப்படுமானல், நாங்கள் சொல்லியுள் ளவை யாவும் உண்மை என்பது புலப்படும்,” என்று எழுதப்பெற்றிருப்பதைக் குறிபி ட்டார் இவ்வாறு பேனாவின் வலி கொண்டு பிரபுக்கள் சபையிலும் மக்கள் சபையிலும் அறப்போர் நடைபெறத் தம் ஆற்றலைப் பயன் படுத்திய லட்சுமி நரசிம்முலு,