உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதற்பெருந்தமிழர் என்புடையார் அன்புடைய இராமசா மிக்குரிசில் உன்புடையார் நயசுகுனம் ஒவ்வொன்றை உன்னியுன்னி அன்புடையார் பல்லோரும் ஆற்றும்வழி கானராய்த் துன்புடைய ராகிமணஞ் சோர்ந்திடவெங் கன்றணையோ!

    என்புடை-என்னிடத்தில்)                              

இன்றேனும் பாலுமெனும் இன்சொலுடை யாய் வைரக் குன்றேனும் ஒவ்வாக் குணனுடையாய்! குற்றத்துள் ஒன்றேனும் உனயணுக ஒன்னுதோ! சார்த்திருப்பின் என்றேனும் நிற்பிரிதல் எம்மை வகுத்திடுமோ!

    இன்றேனும்-இன் + தேனும், நிற்பிரிதல்-உனப் பிரிவது‌

ஊர்க்குழைப்பான் போனுன் 'என்றுலைவாகும், போனுனிப் பார்க்குழைப்பான்!” என்றுருகி நிற்பாகு மாய்க்கலங்க ஆர்க்குழைப்பான் சென்றாய் அளியுடைய அண்ணலே!

                   பெரும்புலவர், உ. வே. சாமிநாத ஐயர்

சேலம் என்றவுடனே ராஜாஜி, விஜயராகவாசாரி யார், வரதராஜுலு நாயுடு போன்ற அரும்பெறல் அரசியல் தலைவர்களின் நினைவு வருதல் இயற்கை. ஆனல், இப்பெரியோர்கள் எல்லாம் தமிழக அரசியல் வானில் ஒளி காலுவதற்கு முன்பே சேலம் மாநகர், செந்தமிழ் நாட்டின் புகழ், இந்திய அரசியல் வரலாற்றில் உச்சநிலைல பெறும்பொருட்டு சன்றளித்த மாணிக்கமே சேலம் இராமசாமி முதலியார்.

இற்றைக்கு நூற்றாறு ஆண்டுகட்கு முன் (6-9-1859) சேலமாநகரில் தமிழ்த் தாயும் பாரத அன்னையும் செய்த தவப்பயனால் தோன்றிய சான்றோரே