உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரை புரண்ட காதல்

55

இங்கே வருகிறேன்" என்று குழந்தை கொஞ்சுவதைப்போலக் கேட்டார் ஜெமீந்தார்.

"அப்படியே ஆகட்டும்; போய் வருகிறேன்" என்று சொல்லி விட்டு மல்லிகா விரைவாக நடந்து மாளிகைக்குள் நுழைந்து தனது சயனத்தையடைந்தாள்.

“என்னுடைய முன்னோரும் நானும் எத்தனையோ கோடி ஜென்மங்களில் செய்த பூஜாபலனே இவளை எனக்களித்ததன்றி வேறில்லை. இன்னும் ஒரு வாரத்துக்குள் விவாகத்தை முடித்துக் கொள்கிறேன். உயிரற்ற இந்த மாளிகைக்கு உயிர்கொடுத்து அழகுண்டாக்கக்கூடிய மடந்தை இவளேயாவாள்; அடி மல்லிகா! பரிசுத்த ஸ்வரூபிணி! நீ என்னை ஒரு க்ஷணத்தில் புது மனிதனாக மாற்றிவிட்டாயே! என்ன உன்னுடைய மகிமை உலகில் கற்புடைய மங்கையைப் பெற்று இல்லற வாழ்க்கை செய்வதைக் காட்டிலும் மேலான பாக்கியம் வேறு என்ன இருக்கிறது!" என்று தமக்குள் பலவாறு தத்துவம் பேசியவண்ணம் ஜெமீந்தார் தமது சயன அந்தப்புரத்தையடைந்தார்.

அவர்கள் போன சில நிமிஷங்களுக்குப் பிறகு, படித்துறைக் கருகில் நின்ற ஒரு மரத்தின் மறைவில் ஒளிந்திருந்த ஒருவர் ஒசையின்றி அவ்விடத்தை விட்டு வெளிப்பட்டு மாளிகைக்குள் நுழைந்தது நன்றாகத் தெரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/73&oldid=1229338" இலிருந்து மீள்விக்கப்பட்டது