உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

வஸந்தமல்லிகா

வஸ : ஆகா! அவசியம் பார்க்க வேண்டும். அவள் எங்கே இருக்கிறாள்? அவள் என்னைப் பார்க்க விரும்புவாளோ மாட்டாளோ?

தம : சொத்துக்களை ஒப்புவிக்கும் போது நீங்கள் இருவரும் அவசியம் சந்திக்க வேண்டுமே! நாளைக்கு அடுத்த நாள் பவானியம்மாள்புரத்து பங்களாவுக்கு வாருங்கள். அவளை அங்கே அழைத்து வந்து வைத்திருக்கிறேன். அங்கே நீங்கள் சந்திக்கலாம் - என்றாள்.

வஸந்தராவ் அதை ஒப்புக்கொள்ள, தரகர் இருவரும் விடை பெற்றுக் கொண்டு சென்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/256&oldid=1234071" இலிருந்து மீள்விக்கப்பட்டது