உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 i

ஒற்றர்களின் துணையால், வீட்டுக்கு அண்மையிலிருந்த ஒரு குறுக்குச் சங்தில் வெளியேறி, ஒரு சாமான் கிடங்கில் புகுந்து, சாக்கு மூட்டைகளின் வழியாக இருட்டில் தட்டுத் தடுமாறிக் கடைசியில் வீதிக்கு வந்து சேர்க்தார்கள். அந்தக் கிடங்கின் வாயிலிலும் வெள்ளையர் கூட்டம் கின்று கொண் டிருந்தது. ஆனல் வெளிவந்த இந்தியர்களில் காந்தியடி களும் இருப்பார் என்று அவர்கள் கருதவில்லை. எல்லாருடைய கவனமும் ரஸ்டம்ஜியின் வீட்டு வாசலில் இருந்தது.

ரஸ்டம்ஜியின் வீட்டு வாசலில் இருந்த உயரமான படிக்கட்டில் ஏறிக்கொண்டு அலெக்சாண்டர் மக்களின் கொங்தளிப்பை அடக்க முயன்று கொண்டிருந்தார்: முடிய வில்லே. மக்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்புவதற்காக ஒரு வழி செய்தார்.

“புளிப்பு இலந்தை மரத்தின் மீது

பொல்லாத காந்தியைத் தூக்கி லிடு’

என்று தாமே ஒரு பாட்டை இட்டுக் கட்டிக்கொண்டு பாடினர். அப் பாட்டைக் கேட்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சி யடைந்தனர்; அவரோடு சேர்ந்து பாடவும் செய்தனர். இதற்குள் காங்தியடிகள் வெளியேறி விட்டார் என்பதை உணர்ந்த அலெக்சாண்டர் கூட்டத்தை நோக்கிக் “காந்தி இங்க வீட்டில் இல்லை. நீங்கள் கலைந்து செல்லலாம்” என்று கூறினுர். மக்கள் அவர் பேச்சை நம்பவில்லே. சிலர் சினங் கொண்டனர்; சிலர் சிரித்தனர்.

‘இல்லது! உங்களுக்கு என் பேச்சில் கம்பிக்கை இல்லாவிட்டால் உங்களில் இருவரை என்னுடன் அனுப்புங்கள். காந்தியை அவர்கள் கண்டுபிடித்தால் உங்களிடமே ஒப்படைத்து விடுகிறேன். இல்லாவிட்டால் நீங்கள் எல்லோரும் இங்கிருந்து சென்று விட வேண்டும். ாஸ்டம்ஜியின் விட்டுக்கோ காந்தியடிகளின் குடும்பத்