உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொக்குப்பொடி

57

ஆளை மயக்கிவிட்டாளே! இப்படிப்பட்ட வேசிகள் இன்னும் நாலைந்து பேர் இருந்தால் ஊர் நாசந்தான். பிறகு தாஸிகளெல்லாம் தொழிலில்லாமல் ஓட்டம்பிடிக்க வேண்டியதுதான்" என்றாள் கமலா.

"அக்கா! என்ன நீங்கள் தாறுமாறாகப் பேசுகிறீர்களே! இன்னதென்று விளங்கவில்லையே! தயவு செய்து விவரமாகச் சொல்லுங்கள்” என்று சாந்தமாக வினவினாள் மல்லிகா.

"அந்த வெட்கக்கேட்டை விவரிக்கவும் வேண்டுமா! உம்! நீ என்ன செய்வாய்? ஊர் கெட்டகேடு அப்படி இருக்கிறது" என்றாள் ஸீதா.

"இவள் இப்படி நீலித்தனம் செய்தால் யார்தான் என்ன செய்யும்? யார்தான் என்ன செய்வார்கள்? வந்தபோது நம்மோடு எவ்வளவோ அன்பாகப் பேசிய ஜெமீந்தாருடைய மனசை ஒரு நொடியில் மாற்றிவிட்டாளே! இவளுடைய சாமர்த்தியமே சாமர்த்தியம்! வரவர, அவர் நம்மிடம் அன்பாக ஒரு வார்த்தை சொல்வதையும் விட்டு விட்டாரே! சிரித்துப் பேசுவதையே மாற்றிவிட்டாரே!" என்று ஆத்திரமாக மொழிந்தாள் கமலா.

"இவள்தான் எல்லாவற்றையும் தன்மேல் மாற்றிக் கொண்டாளே! அவர் இனி நம்மை ஏன் கவனிப்பார்? இவளைப் போல் கெட்டுப்போனவள் ஒருத்தியுமில்லை. பட்டப்பகலில், இத்தனை பேர் கூடவே இருக்கையில், நீராடும் மண்டபத்தில் அவரோடு தனியாக இருந்து கொஞ்சிக்குலாவி விளையாடுவதும், ரோஜாப்பூ வேண்டுமென்று கேட்டு வாங்கியணிந்து கொள்வதும், வேறு யார் செய்வார்கள்? நாம் அவ்விதம் செய்ய சம்மதிப்போமா?" என்றாள் ஸீதா. அவர்கள் அவ்வாறு மேன்மேலும் வயிற்றெரிச்சலினால் பிதற்றியதைக் கண்ட மல்லிகா, அவர்களது மௌடீகத் தனத்தை நோக்கி கலகலவென்று நகைத்தாள். அதைக் கண்ட அவர்களிருவருக்கும் கோபத்தினால் முகம் கருத்தது.

"ஆகா! சிரித்து எங்களை ஏளனம் செய்கிறாயா? உனக்கு அவ்வளவு துணிவா?" என்றாள் கமலா.

"குடியிருந்த வீட்டில் கொள்ளி வைப்பதைப்போல, எங்களுடைய வீட்டிலிருந்து கொண்டே எங்களைத் தூஷிக்கிறாயா? உன்னுடைய யோக்கியதை இவ்வளவுதான் என்று நாங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/75&oldid=1229340" இலிருந்து மீள்விக்கப்பட்டது