44
வஸந்தமல்லிகா
"மல்லிகா! நீ கூட அறியாதவளைப் போலப் பேசுகிறாயே! ஏராளமான செல்வமும் சிறப்பும் இருந்தாலும் மனதின் அமைதியில்லாவிட்டால், அவைகளினால் என்ன சுகம் உண்டாகப் போகிறது! செல்வமென்பது சிந்தையின் அமைதியல்லவா!" என்றார் ஜெமீந்தார்.
“சற்றுமுன் தாங்கள் கமலாவுக்குச் சொன்ன புத்திமதி நினைவுக்கு வரவில்லையோ? இப்போது கிடைக்கும் சுகத்தை நினைக்காமல், இறந்த கால எதிர்காலக் குறைகளை நினைத்து வருந்தக் கூடாதென்று சொன்னீர்களே. அதை உங்கள் சொந்தக் காரியத்தில் மறந்து விடலாமோ?" என்று புன்சிரிப்போடு தெரிவித்தாள் மல்லிகா.
"மல்லிகா! உன்னுடைய கூர்மையான புத்தியும் கிரகண சக்தியும் என்னவென்று சொல்லுவேன்! பிறர் சொல்லும் புத்தியைத் தவறிவிடாமல் கவனித்து மனதில் பதியவைத்துக் கொண்டு, அதைச் சரியான சமயத்தில் பயன்படுத்த முயல்வது உத்தம குணமல்லவா! அத்தகைய நற்குணம் வாய்ந்த பெண்மணி எவ்வளவு மேலானவள்! அவளைக் காட்டிலும் விசேஷமான பொருள் உலகில் வேறுண்டா? மல்லிகா! உன்னுடைய நற்குணத்தையும், அடக்க ஒடுக்கத்தையும் கண்டு நான் பெரிதும் மனமகிழ்ந்தேன்; மெச்சினேன்! மெச்சினேன்! அன்றிரவு உன்னைக் கண்டமுதல், உன்னிடத்தில் ஒருவிதப் பற்றும் அன்பும் உண்டாகி நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகரிப்பதைக் காண, அதன் காரணம், உன்னுடைய நற்குணமும் நன்மொழியுமென்றே இப்போது விளங்குகிறது. இந்த முறை உன் காரியங்களையும், பரிசுத்த குணத்தையுங்காண, இனி ஒரு கணமேனும், உன்னை விட்டுப் பிரியக்கூடாதென்னும் ஒருவித ஆவல் உதிக்கிறது" என்று கூறி மேலும் ஏதோ விஷயத்தைத் தெரிவிக்க ஆரம்பித்தார் ஜெமீந்தார். தமது ஆவேசத்தை அடக்கிக்கொண்டு, "மல்லிகா இப்போது நீ சொன்ன நற்புத்தியை நான் இனி மறப்பதில்லை. இறந்தகால எதிர்கால விசனங்களை மறந்துவிட இனி முயலுகிறேன். இதற்குத்தான் நற்குணம் வாய்ந்த ஸ்திரீகள் புருஷருக்குத் துணையாயிருக்க வேண்டுமென்பது. அந்தந்தக் காலத்துக்கேற்ற யோசனையை மந்திரியைப் போலச் சொன்னால் புருஷருடைய மனக்கவலைகளுக்கு அது எவ்வளவு ஆறுதலாயிருக்கும் நான்