முடவனும் கொம்புத்தேனும்
33
"இந்த மாளிகையில் நான் எப்போதும் வசிக்கலாமென்று தீர்மானம் செய்து கொண்டேன், தஞ்சையிலுள்ள மற்ற பொருள்களைப் பற்றி தக்க ஏற்பாடுகள் செய்துவிட்டு வரவேண்டுமென்ற எண்ணத்துடன் உடனே போனேன். அந்த வேலை நேற்றோடு முடிந்தது. இன்று சாயுங்காலம் சமையற்காரன் முதலியோருடன் ஸகாராம்ராவ் வந்து சேருவார். நீங்களும் என்னுடன் கூட வருவீர்களானால் நாம் எல்லோரும் வேடிக்கையாகப் போய்ப் பழைய காலத்து அறைகளின் விநோதங்களைப் பார்த்து சந்தோஷப்படலாம்" என்றார் ஜெமீந்தார்.
"இந்த மாளிகையை நான் வெளியிலிருந்து பார்த்த போதெல்லாம் இதற்குள் போய்ப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எத்தனையோ தடவைகளில் உதித்தது. அது உங்கள் தயவால் இன்று நிறைவேறப் போகிறது" என்று சந்தோஷமாகத் தெரிவித்தாள் கமலா.
அவ்வாறு பேசியவண்ணம், அவர்களது போஜனம் முடிந்தது; ஜெமீந்தார் தாம்பூலம் தரித்துக்கொண்டு இரண்டொரு நாழிகை இருந்த பிறகு துக்கோஜிராவை நோக்கி, "பங்களாவுக்குப் போவோம் புறப்படுங்கள்" என்றார். அதைக் கேட்ட கமலா ஸீதா ஆகிய இருவரும், 'நான் முன்னால்' 'நீ முன்னால்’ என்று புறப்பட்டார்கள். உடனே துக்கோஜிராவும் எழுந்து மல்லிகாவை அழைத்து, "மல்லிகா நாங்கள் எல்லோரும் பங்களாவுக்குப் போகிறோம். நீயும் வருகிறாயா?" என்றான்.
"நான் அங்கே வந்து என்ன செய்யப் போகிறேன்? இங்கிருந்தால் ஏதாவது காரியம் ஆகும்" என்றாள் மல்லிகா.
அதற்குள் கமலா, "வீட்டைக் காலி செய்துவிட்டு எல்லோரும் போகக்கூடாது. இவள் இங்கேயே இருந்து பார்த்துக் கொள்ளட்டும். அங்கே வந்து என்ன செய்யப் போகிறாள்?" என்றாள்.
"இவளுக்கு ஆசையாயிருந்தால் பிறகு ஒருநாளைக்கு வரட்டுமே! எல்லோரும் போய்விட்டால் ராத்திரி போஜனத்தை யார் தயார் செய்கிறது? இவள் வரவேண்டாம்" என்றாள் ஸீதா.
உடனே ஜெமீந்தார் துக்கோஜிராவை நோக்கி, "துக்கோஜி! நீங்கள் அங்கே வந்தால் இன்று திரும்பிவர முடியாது. அங்கே
வ.ம.-4