பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

பறிமுதல் செய்து சர்க்கார் வசப்படுத்தவும் உத்தரவு செய்கிறோம்" என்று கூறி முடித்தான்.

அந்தத் தீர்மானம் திவானுக்கு இடிவிழுந்தது போலாய் விட்டது. சகிக்க இயலாத வேதனையும் கலக்கமும் கலவரமும் தோன்றி அவரை வதைக்கலாயின. அவரது உடம்பு கை கால்கள்யாவும் வெட வெட வென்று நடுங்கிப்பதறுகின்றன. வெட்கமும் துக்கமும் ஒருபுறத்தில் பொங்கி எழுகின்றன. மூளை கிறுகிறுவென்று சுழலுகிறது. புத்தி தடுமாறுகிறது. நாக்கு குழறிப்போகிறது. உடம்பு குபிரென்று வியர்த்துவிடுகிறது. கண்களில் கண்ணிர் ததும்புகிறது. அவர் அப்படியே மயங்கிக் கீழே சாயப் போன சமயத்தில் அவருக்குப் பின்னால் நின்ற சேவகர்கள் இருவர் அவர் கீழே விழாதபடி அப்படியே பிடித்து நிறுத்திக் கொண்டனர். உடனே திவான் அரசனைப் பார்த்து, மெதுவான குரலில் பேசத்தொடங்கி, "மகாராஜனே! எனக்குத் தாங்கள் கொடுப்பது மகா கொடுமையான தண்டனை. தாங்கள் ஒரு குற்றத்தையும் செய்யாதவனான என்னைத் தண்டிப்பதோடு, என் வீட்டிலுள்ள என்னைச் சேர்ந்த நிரபராதிகளான என் ஜனங்களையும் தண்டிக்கிறீர்கள். எங்கள் வீட்டில் வயோதிகர்களான என் தாயும், தகப்பனாரும் இருக்கிறார்கள். மேலும் என் தம்பிமார், என் சம்சாராம், தங்கைகள் முதலிய சுமார் பத்து ஜனங்கள் இருக்கிறார்கள். என் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்தால், அவர்கள் ஏழ்மை நிலைமையடைந்து பிச்சை எடுத்துத்தான் ஜீவனம் செய்ய நேரும். யாரோ மோசக்காரர்கள் செய்த குற்றத்திற்காக என்னையும் என்னைச் சேர்ந்தவர்களையும் தாங்கள் இவ்விதம் தண்டிப்பது கொஞ்சமும் தெய்வ சம்மத மாகாது" என்று நிரம்பவும் பரிதாபகரமாகவும் மன நைவோடும் பணிவாகவும் கூறினார்.

அதைக் கேட்ட மகாராஜன், "ஐயா! இது மன்னிக்கத்தக்க அற்ப சொற்பமான குற்றமென்று நீர் நினைக்கிறீரா? இந்த உலகத்தில் வேறே எந்த திவானுடைய தர்பாரிலும் இப்படிப் பட்ட ஜெகஜாலக்கொள்ளை நடந்திருக்காது என்பதும், இனி நடக்காது என்பதும் நிச்சயம். உம்முடைய அஜாக்கிரதையினால் இந்த சமஸ்தானத்திற்கும் எனக்கும் ஏற்பட்ட அவமானமும்

71