பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ ஃபாசிசமும் தலை விரித்தாடிய காலத்திலும் கவிஞர்கள் தங்களை மறைத்துக் கொண்டு, தங்கள் கருத்துக்களை வெளியிட இந்த உத்திகள் பெரிதும் கைகொடுத்தன. கவிதையின் இயல்பு “கவிதை மொழியால் ஆனது மொழி எப்போதும் துல்லியம் அற்றது; தர்க்கம் அற்றது. கவிதை ஆக்கத்தில், இக்கூறுகள் இன்னும் கூடுதலாகிக், கவிதைக்குள் கணக்கில்லா மெளனங்கள், இடைவெளிகள், புதிர்கள், தொனிகள், யூகங்கள் குடியிருக்க நேர்கிறது” என்றும் ‘கவிதை எப்போதுமே வார்த்தைக்கான அகராதிப் பொருளில் இல்லை. வார்த்தைகளுக்கு இடையிலான உறவிலும், அந்த உறவு வாசகனுக்குள் எழுப்பும் அலைகளிலும் இருப்புக் கொண்டிருக்கிறது” என்றும் கூறும் முனைவர் பஞ்சாங்கத்தின் கூற்று அப்படியே ஏற்றுக் கொள்ளத்தக்கது. ஆர்தர் ரேம்போ என்பவன் பிரெஞ்சுநாட்டு ஞானசம்பந்தன். அவன் தன் பத்தாவது வயதிலேயே இலத்தீனில் கவிதை எழுதிப் பரிசு பெற்றவன். பதினாறாம் வயதில் தீவிரமாக எழுதத் தொடங்கிப் பத்தொன்பதாம் வயதில் கவிதை எழுதுவதை அடியோடு நிறுத்திவிட்டவன் அந்த மூன்றாண்டுகளில் வெளிவந்த அவன் படைப்பு அளவில் சிறிதே ஆயினும் ஐரோப்பியக் கவிதைகளின் தலைவிதியையே மாற்றிவிட்டது. ரேம்போ கவிதை இலக்கணத்தையும், வடிவத்தையும் ஒதுக்கித் தள்ளினான். கவிதைச் சொற்களின் இயல்பான பொருளையே மாற்றி, சொற்களின் தன்னியக்கம், சொல்மயக்கம், சொல்விளையாட்டு, ஓசைவேறுபாடு இவற்றின் மூலம் மொழியின் தொடக்க நிலைப்