பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் ; 113 காலரிட்ஜ் தன் திறனாய்வுக் கட்டுரையில் இயாகோவைப் பற்றிக் குறிப்பிடும்போது குறிக்கேள் இல்லாத வெறுப்புணர்ச்சி, (motivelessmalignity) அவன் பண்பு என்று குறிப்பிடுகிறான். ஒருவர் மற்றொருவரை வெறுப்பதற்குப் பொறாமையோ, பகையுணர்ச்சியோ காரணமாக இருக்கும். ஆனால் இயாகோவுக்குக் காரணம் வேண்டியதில்லை. இவன் நல்லதை நல்லது என்பதற்காகவே வெறுப்பவன்; தீயதைத் தீயது என்பதற்காகவே விரும்புபவன். இவன் கயமையைக் கலையாக மதிப்பவன். குறிக்கோள் ஏதும் இல்லாவிட்டாலும், பிறர் படும் துன்பத்தில் மகிழ்ச்சி காண்பவன். இந்த மகிழ்ச்சிக்கு ஒதெல்லோ, டெஸ்டிமோனா, கேஷியோ மூவரும் தேவையான மூலப் பொருளாகக் கிடைத்தனர். ரோமானிய நாகரிகத்தில் திளைத்த வெனிசு அரசின் தளபதி என்னும் மதிப்பிற்குரிய பதவியில் இருந்தாலும், ஒதெல்லோவுக்குச் சில தாழ்வுணர்ச்சிகள் உண்டு. தான் நாகரிகமற்ற காட்டுமிராண்டி இனத்தில் தோன்றியவன்; கருப்பன்; அழகற்றவன்; வயதானவன் என்ற உணர்வுகளே அவை. அவன் உணர்ச்சி வசப்படும்போது, அத்தாழ்வுணர்ச்சிகள் அவனை யறியாமல் வெளிப்படுகின்றன. டெஸ்டிமோனாவின் கற்பைப்பற்றிக் களங்கம் கூறி, ஒதெல்லோவின் உள்ளத்தை இயாகோ குழப்பிவிட்டுச் சென்ற பிறகு, “நான் கருப்பானவன்; அவளது நாட்டு ஆடவர்களைப் போல் இதமாகப் பேசத் தெரியாதவன்; வயதானவன்” என்று சொல்லி வெளிப்படையாகவே புலம்புகிறான். மற்றோரிடத்தில் “கற்புத் தெய்வம் டயானாவின் முகம்போல ஒளி படைத்திருந்த டெஸ்டிமோனாவின் பெயர், இப்போது என் கருத்தமுகம் போல்