பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் டு) ஒதெல்லோ ஒரு மன நோயாளி கிணற்றின் ஒரத்தில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் பழுதைப் பாம்பாக எண்ணி மயங்குவதை மாயை என்று வேதாந்தம் கூறுகிறது. மருத்துவ நூலார் இதே போன்ற ஒரு மனநிலையை மனமயக்கம்' (Delution) என்று குறிப்பிடுகின்றனர். இஃது ஒர்வகை மூளைக் கோளாறு. உண்மையல்லாத ஒன்றை உண்மையென நம்பி உள்ளத்தைக் குழப்பிக் கொண்டு, உள்ளம் செலுத்தும் தவறான வழியிலேயே செல்வது இந்நோயின் தன்மை. நல்ல மனநிலையில் உள்ளவர்கள், காரண காரியங்களோடு விளக்கப்பட்டால், தம் தவற்றை உணர்ந்து திருந்திவிடுவர். மனநோயாளியாக இருப்பவர்கள், காரண காரியங்களைப் பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். பிறர் எடுத்துக் காட்டினாலும் புரிந்து ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இம்மனமயக்க நோய் பலவகைப்படும். ஏழையாக இருக்கும் ஒருவன் தன்னைச் செல்வனாக எண்ணிக் கொண்டு நடப்பதும், காண்பவர் யாவரும் தன்னைப்பற்றியே பேசுவதாக ஐயுறவு கொள்ளுதலும், gigas glu%6b (hypnotism), Guðulb (Telepathy) eggðu புறத்துண்டுதல்களுக்குத் தான் ஆட்பட்டிருப்பதாக எண்ணி அஞ்சுவதும், தன் கடந்தகாலத் தோல்விகளையும் குற்றங்களையும் அடிக்கடி நினைவு கூர்ந்து தன்னையே நொந்து கொள்வதும், நலத்துடன் இருக்கும்போதே தன் உடலில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு கவலைப்படுவதும், கற்:ாள்ள தன் மனைவியைக் கற்புக் கெட்டவளாக எண்ணித் தாறுமாறாக