இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சனி பகவான்
77
பின்னர் முன்னவர் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டார். மோகனராவ் உடனே வெளியில் வந்து அடுத்த வீட்டிற்குள் நுழைந்து மல்லிகாவைத் தேடிப் பார்த்தார். அழகிய பெண்ணுருவம் எங்கும் கண்ணிற் படவில்லை. அவர் சிறிது நேரம் யோசனை செய்தவண்ணம் அப்படியே நின்றார். "சரி; இவருடைய வலையிலிருந்து தப்பித்துக்கொண்டு தன்னுடைய வீட்டுக்குப் போய்விட்டாள் போலிருக்கிறது. ஐயோ பாவம்! ஒன்றையுமறியாத பேதை ஸ்திரீ என்ன இளமை என்ன சொகுஸு போகட்டும்; எப்படியாவது தப்பித்துப் போனதே சந்தோஷம்" என்று தமக்குள் நினைத்தவராய்த் தமது ஜாகையை அடைந்தார்.