அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் மூன்று/உருப்பிணி திருக்கல்யாணம்
Appearance
←←கஞ்சன் வதம் | உருப்பிணி திருக்கல்யாணம் | கௌரவர் பஞ்சவர் வரலாறு→→ |
- கஞ்சனையு மற்றுமுள்ள காலவுணர் தங்களையும்
- வஞ்சகமா யுள்ள வாண நரபாலனனயும்
- இம்முதலா யுள்ள ஏற்ற வரக்கரையும்
- அம்முதலா யுள்ளவரை அரியோ னறுத்தனராம்
- சத்தபில முள்ள தத்துவத்தார் தங்களையும்
- வித்தகனார் கொல்ல மேல்நினைத்தா ரம்மானை
- கஞ்சன் வலிமை கட்டழித்துத் தேவருக்கு
- அஞ்சல ருளிஆழிக்குள் வீற்றிருந்தார்
- வாரிக்குள் கோட்டை வளைந்துமணீ மேடைவைத்து
- வீரக் குருநாதன் வீற்றிருந்தா ரம்மானை
- மாயன் துவரம்பதி வாழ்ந்து தானிருக்க
- நாயனுக்கு வந்த நல்ல வுருப்பிணியை
- விதியை அறியாமல் மேலுமொரு ராசனுக்கு
- திருமாங் கிலியஞ் சேர்க்கத் துணிந்தனராம்
- அப்போது நாரதரும் அரியோனடி பணிந்து
- இப்போது வுந்தனக் கிசைந்த வுருப்பிணீயை
- பாணீக் கிரணம் பண்ணப் பறையடித்தார்
- நானிதையுங் கேட்டு நாடியுரைத்தே னென்றார்
- அம்முனிவன் சொல்ல அரியோன் மிகக்கேட்டு
- இம்முனிவன் போக இசைந்தார் காணம்மானை
- மோகத் திருமால்தன்னை முக்கோடி பொன்னதுக்கு
- வேகத்தாலுண்டு பண்ணி விரைவாய்க் கொடுநடந்தார்
- முழுத்திருமாலை தன்னை மொய்குழலாள் கன்னியுட
- கழுத்திலே யிட்டுக் காமக்கண் நீட்டிடவே
- மாயனுக்கு மோகம் மாதுக்கும் மும்மோகம்
- தேசமெல்லாங் மோகஞ் சென்றது காணம்மானை
- முன்னாலே கேட்டு முகூர்த்தமிட்ட பேர்களையும்
- அந்நாளே கொன்று அவன்படையுந் தானறுத்து
- உருப்பிணிக்குத் தேவரல்லாஞ் ஓலமிட மாலையிட்டு
- விருப்புகழ்ந்த மாயன் விமான மதிலேறி
- மனோன் மணியையுங்கூட்டி மாயன் படையுடனே
- வினோகர மால்தானும் விரைவாய் நடைநடந்து
- கடலுக்குள் சென்றிருந்தார் காயாம்பு மேகவண்ணர்
- இப்படியே முன்னம் இசைந்திருந்த பெண்ணையெல்லாம்
- அப்படியே மாலையிட்டு அமர்ந்திருந்தா ரம்மானை
- ஆயர்குடீயில் வளர்ந்து வெண்ணை அருந்தி முறைமா தரையணைந்து
- தீயன் கொடிய கஞ்சனையும் திருக்கி யறுத்து யசுரரையும்
- உபாய முடனே குலையடக்கி உருப்பிணி முதலாய்ப் பெண்களையும்
- தேயம் புகழ மணமுகித்துத் துவரயம் பதியிலி ருந்தனரே
- ஆயர்குடீயில் வளர்ந்து வெண்ணை அருந்தி முறைமா தரையணைந்து