அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் மூன்று/கௌரவர் பஞ்சவர் வரலாறு
Appearance
←←உருப்பிணி திருக்கல்யாணம் | கௌரவர் பஞ்சவர் வரலாறு | துரியோதனன் சூழ்ச்சி→→ |
- உருப்பிணி முதலாய் ஒத்துவந்த பெண்களையும்
- திருப்பொருத்தம் பூட்டிச் செகலுக்குள் வீற்றிருந்தார்
- கஞ்ச னிடுக்கங்கள் கழித்தந்தக் காரணரும்
- பஞ்சவர்க்கு நன்மைசெய்யப் பார்த்தனர் காணம்மானை
- பிறந்த துரியோதனனும் பிறவியொரு நூற்றுவரும்
- சிறந்தபுகழ் ஐபேருந் தேசமதில் வாழ்ந்து
- அவரவர்க்குத் தக்க ஆர்க்கமுள்ள வித்தைகற்று
- எவரெவரும் மெய்க்க இவர்வளர்ந்தா ரம்மானை
- வளர்ந்து நிமிர்ந்து வரும் வேளையானதிலே
- இழிந்துருகி வாடும் இசைகெட்ட மாபாவி
- துடியாய் மனுவழக்குச் சொல்லித் துரியோதனனும்
- முடியை வினைசூடி உலகாண்டா னம்மானை
- பாவி யிருந்து பாராண்டச் சிமையிலே
- கோவுகள்க்கு நீர் குடிக்கக் கிடையாது
- தர்மரவ் வீமன் விசையன் சகதேவன்
- நன்மைபரி நகுலன் நாடான நாடதுதான்
- குருநா டெனவே கூறுவா ரன்னகரு
- திருநாடு தன்னுடைய சிறப்புக் கேளம்மானை
- துரியோ தனாதி செலுத்தும் அஸ்தினாபுரத்தில்
- பரி யொட்டகமும் பலமிருக மானதுவும்
- பசியால் தகையால் பச்சி பறவைமுதல்
- விசையாக் குருநகரில் மேவித் தகையாறிவரும்
- அஸ்தினா புரத்தில் அரதேசி யாவரெல்லாம்
- பத்தியா யுள்ள பஞ்சவர்க ளாண்டிருக்கும்
- குருநாடு தன்னில்க் குழாங் கொண்டிருந்தனராம்
- திருநாட்டுக் கொவ்வுஞ் சிறந்த குருநாடு
- ஒருநாடு மந்தக் குருநாட்டுக் கொவ்வாது
- பருநாடு பக்தியுள்ள பஞ்சவர்கள் தன்னாடு
- தேவரும் வானவரும் தெய்வத் திருமாலும்
- மூவரும் நன்றாய் உகந்த குருநாடு
- ஆளியோடு சிங்கம் ஆனைறாஞ்சுப் புள்ளும்
- வேளிசமா யுள்ள வெகுஐந்து தலையரவம்
- வெள்ளானை வெள்ளை மிகுசாரை யானதுவும்
- துள்ளாடி நித்தம் துலங்கிவரும் தன்னாடு
- அன்னாடு நாடு அரநாட்டுக் கீடாகும்
- பொன்னாடு நாடு புத்தியுளார் தன்னாடு
- அரனருளைப் பெற்றிருக்கும் அய்வருட நன்னாடு
- இரவலர்க்கு ஈயும் ஏற்றதர்மர் தன்னாடு
- மாயனருள் பெற்ற மன்னவர்கள் தன்னாடு
- தாய்நாடு வான தழிழ்க்குரு நன்னாட்டில்
- மெய்யில்லா மன்னனுக்கு மேதினியில் பேர்பாதி
- பொய்யில்லாத் தர்மருக்குப் பூபாதி யாகவேதான்
- ஆண்டார் சிலநாள் ஆளுக்கோர் பங்காக
- தாண்டவ ராயர் தண்மையா லம்மானை