அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் மூன்று/கர்ணனுக்கு மோட்சம்
Appearance
←←பாரத போர் | கர்ணனுக்கு மோட்சம் | திருமால் ஸ்ரீரங்கம் புறப்படுதல்→→ |
- பாவியோடு கூடிப் படைசெய்த கர்ணனுட
- ஆவிக்கு மோட்சம் அருளுவதோ மாயவரே
- என்றுரைக்க வியாகர் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
- நன்றுநன்று மாமுனியே நானுரைக்கக் கேட்டருள்வாய்
- பண்டு இலங்கைப் பாரழிக்கவே நினைந்து
- தொண்டு பண்ணிநின்ற துய்யவான ரங்களிலே
- வல்ல பிலமுள்ள வாலியிவன் முப்பிறவி
- நல்லவனாய் முன்னே நாட்டிலி ருக்கையிலே
- இராவணனோடே கூடி ராமசரத் தாலிறந்தான்
- ஶ்ரீராமனாய் நானிருந்து செயித்த விதமறிந்து
- வந்து பணிந்தானே வாலியவனென் காலில்
- நன்றியுள்ள மாலே நானுனக்கு ஏவலனாய்
- முன்னே நீர் அமுர்தம் உவரிதனில் கடைய
- என்னை யொருபுறத்தாய் ஏவல்கொண்ட மாயவரே
- பத்துத் தலையுள்ள பாவியந்த ராவணனை
- கொத்திச் சிரசறுத்துக் கொல்லேனோ நானடியேன்
- என்றந்த வாலி இறைஞ்சி நின்றனெனையுமே
- அன்றந்த வாலிதனக்கு அருளினது நீகேளு
- எனக் கேவலாக இப்பிறவி நீபிறந்து
- தனக்கேராப் பாவிதனைச் சங்காத்தங் கொண்டதினால்
- இனிமே லவனோடிருந்து என்சொல் கேள்க்கவைத்து
- கனியான மோச்ச கயிலாசமே தருவேன்
- என்றவனை அழைத்து இப்பிறவி அய்வரிடம்
- முந்தியுதித்து முதல் பிறவி செய்தவனை
- அரவக் கொடியோன் இடத்தில் அனுப்பிவைத்து
- இரவலர்க்கு மீந்து என்புத்தி யுள்ளிருத்தி
- அன்னை பிதாசொல் அசராமல் அய்பேருக்கு
- தன்னே ஒருகணைமேல் விடேனென்ற உத்தமன்காண்
- ஆனதால் முன்னே அருளிவைத்த சொல்படிக்கு
- மானமாய் மோட்சம் வகுதே னிவனுக்கென்றார்
- நல்லது தானென்று நன்முனிவந்தான் மகிழ்ந்தான்
- எல்லைவைத்த பாரதப்போர் இன்று முடிந்ததென்று
- கொண்டாடி ஐபேரும் குருமுனியைத் தெண்டனிட்டு
- வண்டாடும் வண்ணமகள் மயிர்முடித்து நீராடி
- ஐய்பேரும் பத்தினியும் அச்சுதரையும் போற்றி
- மெய் போகமான வியாகரரையுங் குவித்து
- ஆண்டார்கள் சீமை அச்சுதனார் உண்டெனவே
- பாண்டவர்கள் நன்றாய்ப் பாராளும் நாளையிலே