அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் மூன்று/திருமால் ஸ்ரீரங்கம் புறப்படுதல்
Appearance
←←கர்ணனுக்கு மோட்சம் | திருமால் ஸ்ரீரங்கம் புறப்படுதல் | சான்றோர் பிறப்பு→→ |
- வைகுண்ட மேக மனதிலுற் றெம்பெருமாள்
- பொய்கொண்ட வேசம் பொருந்திப் பொருப்பேறி
- ஆங்கார மோக அம்புக் கணுவாலே
- ஓங்கார மாமுனிவன் விடையேற்றுத் தான்மெலிந்து
- பஞ்சவர்க்கு உள்ள பாரப் பிலன்களையும்
- துஞ்சிவிட வாங்கித் தோற்றமுள்ள அய்வருக்கு
- மேல்நடப் புள்ள விசளமெல்லாந் தானுரைத்து
- நூல் நடந்துவாருமென்று மோட்சத் திறவோனும்
- சீரங்க மாபதியில் செல்கின்ற அப்பொழுது
- சாரங்கர் செய்த தன்மை கேளம்மானை
- அரிகோண மாமலையில் அயோதவமுர்த கெங்கை
- பரிகோண மாமலையின் பகுத்துரைக்கக் கூடாது
- தேன்கமுகு மாங்கமுகு தென்னங் கமுகுகளும்
- வான்கமுகு வாழை வழுவிலா நற்கமுகும்
- சோலை மரமும் சுபசோப னமரமும்
- ஆலமரமும் அகில் தேக்கு மாமரமும்
- புன்னை மரமும் புஷ்ப மலர்க்காவும்
- தென்னை மரமும் செஞ்சந்தன மரமும்
- மாவு பலமரமும் வாய்த்த பிலாமரமும்
- தாவு மரத்தின் தண்மை சொல்லக்கூடாது
- சோலையிலே வீத்திருக்குஞ் சீர்பறவையின் பெருமை
- தூலமின்ன தென்று சொல்லத் துலையாது
- பார்வதியும் ஈஸ்வரனும் பாவித்திருப்பது போல்
- தேர்பதியும் மேடைகளும் சிங்கா சனங்காணும்
- அலையில் துயில்வோர் அங்கிருந்த பாவனைபோல்
- நிலையில் முனிவோர் நிற்பதெண்ணக் கூடாது
- கயிலை யிதென்று கண்ணான மாமுனிவர்
- ஒயிலாகக் கூடி உவந்திருப்பதவ் வனத்தில்
- வைகுண்டங் காண வந்த தர்மியெல்லோரும்
- மெய்குண்டங் கண்டோமென்று இருப்பாரவ் வனததில்
- அப்படியே நல்ல அயோக அமிர்தவனம்
- இப்படியே நன்றாய் இயல்பா யிருப்பதுதான்
- புட்டாபுரங் கிழக்கு பூங்காவு நேர்மேக்கு
- வட்டமுள்ள ஶ்ரீரங்கம் வடக்கு வனந்தெற்காக
- தெற்கே திரிகோணஞ் செங்காவு நேர்வடக்கு
- மிக்க வகைமேற்கு மிகுந்தவனம் நேர்கிழக்கு
- இவ்வெல்கை சூழ்ந்த அயோக அமுர்தவனம்
- அவ்வனத் திலுள்ள அமுர்த கெங்கையானதிலே
- குளித்து விளையாடிக் கூபந் தனிலிறங்கி
- களித்து மகிழ்ந்து கையில்நீர் தான்திரட்டி
- ஈசருட முடியில் இட்டுக்கரங் குவித்து
- வாசமுடன் கயிலை வாழ்ந்திருக்கு மாமடவார்
- மரகத வல்லி வள்ளி சலிகையெனும்
- சரகதக் கன்னி சரிதை அரிமடவும்
- ஏழு மடவும் எண்ணெண்ணு மிப்படியே
- நாளு முறையாய் நடத்திவரும் நாளையிலே
- மாலறிந்து கன்னிமுன்னே வந்தார் சன்னாசியென
- ஏலறிந்து கன்னி இவரல்ல ஈசரென்று
- சாய்ந்து விலகித் தையல்நல்லார் போகுகையில்
- ஆய்ந்து தெளிந்த அச்சுதரு முன்னேகி
- பலநாளு மீசுரர்க்குப் பாவையரே நீங்களுந்தான்
- செலந்திரட்டி மேல்முடியில் செய்தீ ரனுஷ்டானம்
- இனியெனக்கு நீங்கள் எல்லோரும் மிக்கவந்து
- கனிநீர்தனையு மெந்தலையில் கவிழுமென்றா ரெம்பெருமாள்
- அப்போது கன்னி எல்லோரு மேதுரைப்பார்
- எப்போதுந் தானாய் இருப்பவர்க் கல்லாது
- மாயவர்க்கு மற்றமுள்ள மயேசுரர் தன்தனக்கும்
- எருதேறி நித்தம் இறவா திருக்குகின்ற
- ஒருவனுக்கே யல்லாது ஊழியங்கள் வேறில்லையே
- கேட்டு ஶ்ரீகிருஷ்ணருங் கிளிமொழியோ டேதுரைப்பார்
- ஓட்டி லிரந்துண்ண ஊர்வழியே தான்திரியும்
- ஆண்டிக்கே யல்லாது அரவணையிலே துயிலும்
- காண்டிப னுக்கேவல் கருதோமென வுரைத்த
- தோகையரே கெங்கையினிச் சுருட்டுவதைப் பார்போமென
- ஆகட் டென்று அச்சுதருங் கோபமுற்று
- மேலோக மாயிருக்கும் வேதயேழு வுகத்தில்
- சாலோக மான சத்திபர லோகமதில்
- ஆதி ரூபமில்லாத ஆகாச சத்தியொன்றும்
- சீரு ரூபமான சிவலோக மானதிலே
- மெய்கொண்ட வானோர் வித்தொன்று தானதுவும்
- வைகுண்ட லோகமதில் வாய்த்த தர்மியானதிலே
- தர்மியொரு வித்துத் தானெடுத்து வேதாவின்
- சென்மித் தெடுத்தார் சிவரிஷி யொன்றதிலே
- தபோதனராய்ச் சண்டன் தன்னுகத்தில் வாழுவரில்
- சகோதரரா யென்று தானெடுத்தா ரம்மானை
- சொர்க்க லோகமதிலே ஶ்ரீராமர் தன்றனக்கு
- பக்குவங் களாகப் பணிவிடைகள் செய்வோரில்
- நல்ல குலமான நயனவித்தொன் றெடுத்து
- வெல்லமர்கோன் வாழும் வெற்றித் தெய்வலோகமதில்
- சத்தியுள்ள வித்தொன்று தானெடுத்தா ரம்மானை
- இப்படியே மேலோக ஏழு யுகமதிலும்
- அப்படியே யுள்ள ஆர்க்கழுள்ள வித்தேழு
- எடுத்துத் திருமால் இருதயத்திலே யடக்கி
- கொடுத்து நின்றதாதாவைக் குவித்துப்பதம் போற்றி
- கன்னியுட கற்பதுக்குக் கருத்தேது செய்வோமென்று
- உன்னி மனதில் ஒருமித்துப் பார்த்தனரே
- பார்த்தனரே கற்பதுக்குப் பக்குவம் வேறில்லையென்று
- தீத்தழலாய்ப் போகத் திருவுருவங் கொண்டனரே