உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மல்லிகாவின் புதிய கணவன்

149

செய்து கொள்ள வேண்டுமென்றும் சொல்லுகிறீர்களே. நான் என்னுடைய மனசையெல்லாம் வேறொருவர் மீது வைத்து மதியிழந்தவளாயினேன். இப்போது அதை மாற்ற முடியவில்லை. தானாகக் கனியாத பழத்தைத் தடியால் அடித்துக் கனியவைப்பது போல, இயற்கையான பிரியமில்லாத ஒரு பெண்ணைக் கட்டிக் கொள்வதில், உங்களுக்கு என்ன சுகம் இருக்கப் போகிறது? ஸ்திரீ புருஷருக்கு பரஸ்பரம் உண்மையான அன்பில்லாவிட்டால் அந்தக் கலியாணம் என்ன பலனைத் தரப் போகிறது? உண்மையான அன்பில்லாத ஸ்திரீயை மணக்க உங்களுக்கு விருப்பந்தானா?

பீம : எனக்கு விருப்பந்தான். நீ என்னுடைய மனைவியானால், உன்னுடைய மனசில் குடிகொண்டிருக்கும் விசனமெல்லாம் ஒரு நொடியில் பறந்து போகும்படி நான் செய்கிறேன். கலியாணம் செய்து கொள்ளுகிறேன் என்று ஒரு வார்த்தை சொல். அது போதும் - என்று சொல்லிக்கொண்டே மோகத்தினால் ஆவேசங் கொண்டவனாய் அவளைப் பிடித்து அணைக்க முயல, அவள் அப்பால் விலகினாள்.

பீம : கண்ணே ! பிரிய சுந்தரி! இதற்குத்தானா என்னைக் கூப்பிட்டாய்? எங்கே? கட்டிக் கொள்வதாய்ச் சொல்லிவிடு. அப்படிச் சொன்னதைப் பற்றி ஒரு நாளும் நீ விசனப்படாமல் இருக்கும்படி நான் உன்னை அவ்வளவு அன்பாக நடத்துகிறேன். உன்னையே என்னுடைய குலதெய்வமாக மதித்து உன்னை என் மனமாகிய கோவிலில் வைத்து ஸதாகாலமும் பூஜிக்கிறேன் என்று கையை நீட்டி அவளது மோவாயைப் பிடிக்கச் சென்றான்.

மல்லி : (அருவருப்போடு அப்பால் நகர்ந்து) இந்தப் பாழுங் கலியாணத்தில் என்னதான் இருக்கிறதோ தெரியவில்லையே! அதைப் பற்றி இவ்வளவு வேதனை என்ன?

பீம : வெளியில் போன என்னைக் கூப்பிட்டு இப்படி வதைக்கிறாயே கண்ணே! இனியும் பிடிவாதம் செய்தால் இப்படியே உன் காலடியில் நான் என்னுடைய நாவைப் பிடுங்கிக் கொண்டு உயிரை விட்டு விடுவேன் - என்று தத்தளித்து நயந்து மன்றாடினான்.

அதைக் கண்ட மல்லிகா சகிக்க மாட்டாதவளாய், "அப்படியானால் சரி; கலியாணம் செய்து கொள்ளுகிறேன்" என்று தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/167&oldid=1233831" இலிருந்து மீள்விக்கப்பட்டது