தமயந்தியும் வஸந்தராவும்
137
வஸ : உன் மேல் அப்படி யாருக்கு விரோதம்? கோவிந்த சாமிராவுக்கா? அவர் எனக்கு நிரம்ப வேண்டியவர். அவராய் இருந்தால் நான் அவரைச் சரிப்படுத்தி விடுகிறேன். அவர் என்னுடைய சொல்லை அவசியம் கேட்பார்.
தமய : இல்லை இல்லை; அவர் நிரம்பவும் யோக்கியர். வேறொரு பாதகனிருக்கிறான். அவனை நான் கல்யாணம் செய்து கொள்ள நினைத்திருந்தேன். அவனையே என்னுடைய ஐசுவரியமாக நான் மதித்தேன். என்னுடைய உயிரைக் கூட அவன் பொருட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தேன். நீ எனக்கு வேண்டாமென்று கூட அவன் என்னிடம் சொல்லாமல், எனக்கு விரோதியாக வந்த அந்த லஞ்சலாட்சியோடு சிநேகம் செய்து கொண்டான், ஓயாமல் அவளுடைய சேலைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டே அலைகிறானாம். அந்த விசனத்தினால் நான் உயிரை விட்டாலும் பீமராவ், என்னைப் பற்றி நினைப்பான் என்பது தோன்றவில்லை. அங்கே போய் இன்னம் அதிகமாக விசனப்படுவதை விட நான் இங்கேயே இருப்பதே நல்லது.
வஸ : பீமராவையா கலியாணம் செய்து கொள்ள நினைத்தாய்? நான் சொல்வதைப் பற்றி வருத்தப்படாதே. அவன் உன்னை விட்டதே உன்னுடைய அதிர்ஷ்டம் என்று நான் நினைக்கிறேன்.
தமய : உண்மையாயிருக்கலாம். ஆனால், நல்லவனோ கெட்டவனோ அவன்மேல் நான் ஆசை வைத்து விட்டேன். ஸ்திரீ ஜாதிக்குப் புத்தியேது? யோக்கியதையற்றவனைத்தான் நாங்கள் அதிகமாக விரும்புகிறது. எனக்கு அவன்மேல் எவ்வளவு ஆசையிருந்ததோ அவ்வளவும் இப்போது வெறுப்பாக மாறி விட்டது. இருக்கட்டும்; காலம் வரும். அப்போது அவனுக்குப் புத்தி கற்பிக்கிறேன்; என்னுடைய குடும்ப விஷயங்களைச் சொல்லி தங்களுக்கு விசனமுண்டாக்க மனமில்லை. தாங்கள் இந்தப் பக்கம் எப்போதாவது வந்தால் இங்கே அவசியம் வந்து விட்டுப் போக வேண்டும்.
வஸ : அப்படியே ஆகட்டும்; நான் தங்கசாலைத் தெருவில் 1501-ம் இலக்கமுள்ள வீட்டில் இறங்கியிருக்கிறேன். எந்த விஷயத்திலாவது என்னுடைய உதவி உனக்குத் தேவையானால்,