இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
Ο 'வைரத்தை வைரத்தால் அறுக்கலாம் என்பார்கள்; நாங்களோ, பசியைப் பசியால் விரட்டி அடிக்கிறோம் என்றாள் இன்னொருத்தி. கொஞ்சம் புதுக்கவிதைபோல் புரியாததால் விளக்கம் வேண்டினேன். அவள் தொடர்ந்தாள்..... ‘எங்களுக்கோ குடற்பசி, எங்களைத் தேடிவரும் உங்களுக்கோ நல்ல உடற்பசி. பசிக்குப் பசி.... எப்படி....' என்று விரக்தியோடு சிரித்தாள். O மெளனமாயிருந்த மற்றொருத்தியிடம் 'உன் கதை என்றேன் 'என் கதை?..... காவிரிப்பூம் பட்டினத்துக் கண்ணகி கதை இல்லை கலியுகக் கண்ணகி கதை; என் கண்கண்ட தெய்வத்தின் கண்ணில் கோடையும் வசந்தமும் O 35