இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தலைவராய் ஆகும் தணியாத ஆசையினால், தலைமைப் பதவி தமக்கில்லை என்றுசொன்னால் விலகுகிறேன் புதுக்கட்சி விரைவில் அமைப்பேன் - என் பலம்தெரியும் பின்னாலே பாருங்கள் என்பார்கள் தொண்டன் ஒருவனில்லை தொடர்ந்துவர என்றாலும் கண்டபடி தலைவருள்ளார்; கட்டுப்பாடிதற்கில்லை. தடிஎடுப்போரெல்லாரும் தண்டல்காரர்களா? கொடிபிடிப்போ ரெல்லாரும் தலைவர்களா கூறுங்கள் யார் தலைவர்? கொடுதலையை என்றாலும் கொடுப்பேன் என் நாட்டின் விடுதலையேமேல் உயிர் வெல்லமல்ல எனக்கென்று கூறிடுவோன் குணமென்னும் குன்றின்மேல் ஏறிடுவோன் யாரெவனோ அவனேதான் யானறிந்த நற்றலைவன்; பேரறிஞன்வ.உ.சி. பெருந்தலைவன், அருந்தலைவன் வ.உ.சி படமெடுக்கத் தலைநீட்டும் கோடையும் வசந்தமும் 0 149