உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி வள்ளுவர் செல்லமுதல் வறியார்க்கு வேண்டியவற்றை வழங்கி, அவர் உவத் தலால் அருளுடையார் எய்தும் இன்பம் மற்ளுெகு வகையானது. அதனை ஈத்துவக்கும் இன்பம் என்று குறிப்பார் திருவள்ளுவர். அதனையே வள்ளியம் என்னும் செருக்கு என்றும் வழங்குவார். ஈகையால் விளையும் இன்பத்திற்கு ஓர் எல்லே காட்ட விரும்பிய வள்ளுவர், காதலின் இன்னுத தில்: இனிதது உம் ஈதல் இயையாக் கடிை’ என்று இயம்பியருளினர். ஒருவற்கு இறப்பைப் போன்று இன் குதது ஒன்றுமில்லை. அத்தகைய துன்பமும் வறியார்க்கு ஒரு பொருளை வழங்கமுடியாத வழி, அருள் நெஞ்சினர்க்கு அளவற்ற இன்பம் தருவதாகும். தமிழ் மதுரைத் திருநகரில் கஜலமகள் கோவில் மண்டபத்தே ஆபுத்திரன் என்னும் அந்தணச் சிறுவன் வாழ்ந்து வந்தான். வாரணுசியைச் சார்ந்த அச் சிறுவன் வேள்விப் பசுவின அவிழ்த்துவிட்ட குற்றத்திற்காக அங்குள்ளாரால் விரட்டப்பெற்று மதுரை மாநகரை உற்றவன். அவன் நாள்தோறும் கையில் ஒடேந்தி வீடுகளில் சென்று பிச்சை ஏற்பான். பிச்சையெடுத்து வந்த சோற்றைத் தன்னைச் சார்ந்தார்க்கு உவகையுடன் வழங்கித் தானும் உண்டு மகிழ்வான். பசியால் தன்னைச் சூழ்ந்தோர் உணவுண்டு பசியாறி மலர்ந்த முகத்துடன் விளங்குவதைக் காணக் கழிபேரின்பம் எய்துவான். இங்ஙனம் பிச்சை எடுத்தும் பேரறம் புரிந்துவரும் அந்தணச் சிறுவனிடம் பெருமழை பொழிந்துகொண் டிருந்த ஒருநாள் நள்ளிரவில் பசியுடன் வந்த பலர், தமது பசியைப் போக்குமாறு வேண்டினர். அந்த தள்ளிருட் போதில் யாது செய்வதெனத் தெரியாது