உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அவையும் ஆற்றலும் கல்வி கேள்விகளால் மேம்பட்ட சான்ருேர் கூடிய கூட்டமே அவையெனப் போற்றப்படும். அஃதே நல் லவை யென்றும் சொல்லப்பெறும். மற்றவர் கூட்டமெல் லாம் புல்லவை யென்றே இகழப்படும். அறிஞன் ஒருவன் தான் கற்றுனர்ந்த நுண்பொருள்களைச் சொல்லத்தக்க அவை நல்லவையே. கல்வி அறிவில்லாக் கயவர்கள் கூடிய புல்லவையுள் நல்ல பொருள்களை மறந்தும் சொல் லற்க என்பார் வள்ளுவர். புல்லவையுன் பொச்சாந்தும் சொல்லற்க நல்ல்வையுள் நன்கு செலச்சொல்லு வார்’ என்பது அவரது சொல்லமுதமாகும். சிறந்த நூல்களைக் கற்றுணர்ந்த அறிஞர்க்கு மற் றவர் உள்ளங் கொள்ளுமாறு உயர்ந்த கருத்துகளை எடுத்துரைக்கும் வல்லமை அமையவேண்டும். இன்றேல் அவர் பெற்ற பேரறிவாற் சிறிதும் பயனில்லை. அவர்கள் மணமில்லாத மலருக்கு ஒப்பாவர் என்பர் ஒப்பில் புலவர். 'இணகுர்த்தும் தாரு மலரனயர் கற்ற(து) உணர விரித்துரையா தார்’ என்பது அவர்தம் வாய்மொழியாகும். கற்றவற்றை மற்றவர் தெற்றெனத் தெரியுமாறு விசித்துரைக்கும் சொல் வன்மை இல்லாதார், கொத்தில் அழகுற மலர்ந்தும் மணங் கமழாத பூவினைப் போல்வர் என்று புகல்வார். தேருந்தொறும் இனிமை பயக்கும் தெள்ளிய நூல்களை ஒதுவார்க்கு ஒப்பில்லாதோர் இன்பம் உண்டா கும் என்பர் தெய்வப் புலவர். நவில்தொறும் நூல் நயம்' என்பது அவரது நன்மொழியன்ருே அத்தகைய கலை