அமைச்சும் அங்கமும் 83
- அறிகொன்(று) அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்." என்பது அக் கருத்தை அரண்செய்யும் குறளாகும். அரசன் உழையிருந்தே உறுதி உரைக்கவல்ல அமைச்சரது இயல்பைத் திருவள்ளுவர் பத்து அதிகாரங்களில் நூறு பாக்களால் சிரிதின் விளக்கு கின்றர். குடியரசு கிலவியுள்ள நம் பாரதநாட்டில் எத்தகையினரும் அமைச்சராதற்குரிய வாய்ப்பு இருக் கிறது. ஆதலின் அமைச்சராக இருப்போரும் அமைச்சராக முயல்வோரும் வள்ளுவர் வழங்கியுள்ள உலகப் பொதுமறையில் காணும் அமைச்சியலை மட்டுமேனும் ஆய்ந்துணரக் கடமைப்பட்டவராவர். அப் பகுதியில் உள்ள நூறு பாக்களின் இருநூறு வரிகளையும் அவர்கள் கற்று உணர்தல் இன்றி பமையாததாகும். அரசியலிலேயே ஊறித் திளைத்த பேரறிவாள ாகிய வள்ளுவர் பெருமான், அமைச்சரைப் பற்றி அரசியலிலும் பொதுவாகக் கூறிப் போந்தார். அமைச்சராவார் அரசியல்; அறத்தின் துட்ப திட்பங் களைத் தெளிவாகத் தெரிந்திருத்தல்வேண்டும். அவர் கள் அறிவு, ஒழுக்கம், பருவம் முதலியவற்ருல் அரசனைக் காட்டிலும் மூத்திருக்கவேண்டும் ; தெய்வத் தாலோ மக்களாலோ அரசனுக்கு வந்த அல்லல்களை அகற்ற வல்லராக இருக்கவேண்டும்; அத்தகைய துன்பங்கள் பின்னரும் வாராவண்ணம் முன்னறிந்து காக்கவல்ல ஆற்றலைப்பெற்றிருக்கவேண்டும்; அரசன் பால் தீச்செயல்களைக் கண்டால் அஞ்சாது இடித்து உரைக்கும் இயல்புடையராய் இருக்கவேண்டும்