ஊழும் தாளும் 65 வலையில் வீழ்த்தினுள். மந்தரையின் தந்திர வலேயுள் சிக்கிய சிறியாளாகிய கைகேயியும் தசரதன் சிந்தை யைச் சிதைத்தாள். இராமனே வனம் புகுமாறு செய் தாள். அரசமுடி தரிக்கவேண்டிய மங்கலநாளில் இராமன் மரவுரி தரித்து வனத்தினை நோக்கி நடக் தான். இங்கில ஏற்படுதற்கு ஊழ்வினையே காரண மன்ருே இதனேச் சொல்லவந்த கவியரசராகிய கம்பாாடர் ஊழின் பேராற்றலை வலியுறுத்தி உரைத் தருளினர் : வாழ்வினே துதலிய மங்க லத்து தாள் தாழ்வின யதுவரச் சீரை சாத்தினுன் சூழ்வின நான்முகத் தொருவர்ச் சூழினும் ஊழ்வினை யொருவரால் ஒழிக்கற் பாலதோ ?” என்று இராமன் நிலைக்கு மனமிரங்கிப் பேசுகிருர் அப் பெருங்கவிஞர். அன்று எழுதியதை அழித்து எழுத முடியுமா? என்று கேட்பர் பழுத்து முதிர்ந்த அறிவாளர். முதிர்ந்த தவமுடைய முனிவராயினும் தனிப் பெருஞ்செல்வச் சிறப்புடையாராயினும் பரந்த பேரறிவைப் படைத்தோராயினும் பெருவலியுடையோ ராயினும் வேறு எவ்வகையில் சிறந்தோராயினும் விதியினை வெல்லுதல் என்பது ஒல்லாது என்று உரைப்பார் கச்சியப்பர் :
- முதிர்தரு தவமுடை முனிவ ராயினும்
பொதுவறு திருவொடு பொலிவ ராயினும் மதி:வின ராயினும் வலிய ராயினும் விதியினே பாவரே வெல்லு நீர்மையார்.' என்பது கந்தபுராணக் கவிதையாகும். வ. சொ.-IV-5