உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வள்ளுவர் சொல்லமுதம் சிறந்த பயனைத் தரும் வகையைத் தெரிந்து புரிய வேண்டும். எந்தக் கருத்தையும் ஐயத்திற்கு இட மின்றிப் பிறர்க்குத் துணிவு பிறக்குமாறு தெளிவுறப் பேசுதல் வேண்டும். இத்தகைய வல்லமைகள் எல்லாம் இனிது வாய்க்கப் பெற்ற அமைச்சர் அர சியல் அறங்களே நூல்களானும் அனுபவத்தானும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். அன்னர் கல்வியறிவால் நிறைந்து விளங்குதல் வேண்டும். அர சனது ஆட்சிச் செல்வம் சுருங்கிய காலத்தும் பெருகிய காலத்தும் இடைப்பட்ட கிலேயில் இருந்த காலத்தும் அவ்வங்கிலேக்கேற்பச் செயல் புரியும் திறங்களைத் தேர்ந்து அறிய வேண்டும். எத்துணேத் திறமைகள் அமைந்தவராயினும் அரசற்கு அமைச்சர் அடங்கிப் பணிந்து கின்றே பேசவேண்டும். ஆதலின் அவரை அமைந்த சொல்லார் என்று குறிப்பிட்டார் திரு வள்ளுவர். - * மேற்சொல்லிய வல்லமை எல்லாம், இயற்கை யான நுண்ணறிவும் செய்கையான நூலறிவும் செம் மையாக வாய்த்த அமைச்சர்க்கே அமைவனவாகும். இவ் இருபேரறிவும் பெற்ற திருவுடைய அமைச்சரை வெல்லுதல் அரிதாகும். அவர்கள் பகைவர் சூழ்வன வற்றைத் காம் அறிந்து அழிப்பர்; அப்பகைவர் அறிந்து அழியாதனவற்றைத் தாம் சூழ்வர். ஆதலின் திருவள்ளுவர், -

  • மதி துட்பம் அாலோ(டு) உடையார்க்(கு) அதிநுட்பம்

யாவுள' முன்னிற் பவை." என்று உறுதி தோன்ற உரைத்தருளினர். நூலறி வினும் இயற்கையாக அமைந்த துண்ணறிவே அமைச்சர்க்கு மேன்மை அளிப்பதாகும்.