உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் சொல்லமுதம் குற்ருலத் தமர்ந்துறையும் கூத்தா! உன் குரைகழற்கே கற்ருவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே." என்பது மணிவாசகரின் மதுர வாசகமாகும். இறைவன் திருவடியே பற்றுக்கோடாகக் கொண்டு, மற்றைய பற்றுக்கள் முற்றுங் துறந்த முனிவர் பெருமை அளவிறந்ததாகும். உலகில் பிறந்திறந்தாரை எண்ணி அளவிடுதல் இயலுமோ? அதுபோன்றே துறந்தார் பெரும்ையை அளந்தறிதல் இயலாது. அவர்கள் வீட்டுலகிற்கே வித்துப் போன்றவர் ; பிறர் செய்தற்கு அரிய செயல்களைச் செய்ய வல்ல பெரியர். பிறரை வாழுமாறும் தாழு மாறும் நிறைமொழி சொல்லவல்ல மறைமொழி யாளர். துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய கற்குணங்களாகிய குன்றின்மேல் நின்ற கொற்றத் தினர். ஓரறிவுயிர்க்கும் போருள் சுரக்கும் பெற்றியர். இங்ஙனம் துறவோர் சிறப்பினை அறிவுறுத்தினர் பெருநாவலர். இருள் நிறைந்த இடத்தில் சுடர் விளக்கை ஏற்றில்ல் உடனே அவ் இருள் அகல்வது இயல் பன்றே அஃதேபோல் உண்மைத் துறவு பூண் டாரை விட்டுப் பாவம் தானே விலகும் என்ருர் ஒரு ஆமண முனிவர். தவத்தின்முன் கில்லாதாம் பாவம்' என்பது அவர் மொழியாகும், இத்தகைய துறவு நெறியில் கிலேத்துகின்றர்க்கே மெய்ப்பொருளைக் காணும் மேலான ஆற்றல் உளதாகும். அவ் ஆற்றலே மெய்யுணர்வு எனப்