உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வள்ளுவர் சொல்லமுதம் பிறர் மனே விரும்பிய பெரும்பாவமே என்று மும்மை யும் உண்ர்ந்த முனிவர் ஒருவர் மொழிந்துள்ளார். செம்மையொன் றின்றிச் சிறியார் இனத்தராய்க் கொம்மை வரிமுலேயாள் தோள்மரிஇ-உம்மை வலியாற் பிறர்மனமேற் சென்ருரே இம்மை அலியாகி பாடியுண் பார்.’ என்பது அச் சமணமுனிவரின் நாலடிப் பாடலாகும். வானவர் தலைவனகிய இந்திரன், கெளதமன் மனையாளாகிய அகலிகை மாதை அடைய விரும்பி ன்ை. அக் கெளதமனேப் போன்றே கோலம் தாங்கி கள்ளிருளில் அவன் இல்லம் புகுந்தான். அவ் அகலிகை நல்லாளுடன் இன்பம் துய்த்து அகலும் வேளையில் கெளதமன் கண்டுகொண்டான். அவன் தவம் வல்ல பெரு முனிவகைலின் அவனது கொடிய சாபத்திற்கு உள்ளான்ை. இந்திராணியின் மீது கொண்ட எல்லையில்லாத காம விருப்பத்தால் நகுடன் பல்லக்கில் செல்லும் போது குறுமுனிவன் சாபத்தால் சர்ப்பமாயினன். சந்திரன் குரவன் மனேவியைக் கூடிய கொடும் பாவத் தால் பெருந் துயருக்கு உள்ளானன். இவற்றை யெல்லாம் வலியுறுத்துவார் போல வள்ளுவர்,

  • ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி.' என்று சொல்லி வைத்தார். இலங்கை வேந்தனுகிய இராவணன், இராமன் மனேயாளாகிய சீதையை விரும்பிய பாதகத்தால் அப் பெருமானது கூரிய அம்புகளாலேயே மாண்டொழிந்த கதை, கந்தம் செந்தமிழில் காண்டற்கினிய காவியமாக அன்ருே விளங்குகின்றது !