உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வள்ளுவர் சொல்லமுதம் எட்டாத வீட்டினை எட்டியடைந்தோராவர். இப் பற்றுக்களை விடாதாரைப் பிறவித் துன்பங்கள் இறுகப்பற்றி விடா. முற்றுந் துறந்த பெருமக்களே முத்தி வீட்டை எய்துவர். அதற்குப் பற்றுக் கோடாகப் பற்றற்ற பரம்பொருளே விரும்பி உள்ளத்தே கொள்ளுதல் வேண்டும். இறைவனே பற்றற்ற பழம்பொருள். சார்ந்ததன் வண்ணமாவது உயிர்க்கு இயல்பாதலின் அப் பரம்பொருளைப் பற்றில்ை பிற பற்றுக்கள் தாமே அற்ருெழியும் என்பர் நம் அரும்புலவர். பற்றுக பற்றற்ருன் பற்றினே அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு." என்பது அவர் சொல்லமுதமாகும். பற்றனைத்தும் விட்டொழித்த துறவி யொருவன் கோவணம் ஒன்றைமட்டும் தனக்குப் பற்ருக வைத் திருந்தான். அதனே காள்தோறும் எலி கறித்துச் செல்வதைக் கண்ணுற்ற அவன் அவ் எலியை அழித் தற்குப் பூனே யொன்றை வளர்க்கத் தொடங்கின்ை. அப் பூனைக்குப் பால் வேண்டுமே என்று பசு வொன்றனை வளர்க்கலானன். பசுவைக் காத்தற்குப் பணிப் பெண் ஒருத்தியை நியமித்தான். அவளே ஒழுங்காக வேலை வாங்குதற்கு மற்ருெரு பெண்ணேக் கொள்ள விழைந்தான். மீண்டும் முதலில் விட்டகன்ற இல்லறத்தையே பற்றிக்கொண்டான் என்று கதை யொன்று சொல்வதுண்டு. இதல்ைதான் வள்ளுவர், பிறவியற முயலும் துறவோர்க்கு உடம்பும் மிகை யென்று உரைத்தருளினர். உறுதியான துறவு நெறியில் நிற்கும் உத்தமர், பெற்றேர், மக்கள், குருக்கள், மாதர், இன்னுயிரன்ன