பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. இராமன் விடுத்த தூதன்

தமிழுக்குக் கதி

‘தமிழுக்குக் கதி, கம்பரும் திருவள்ளுவரும்’ என்று கற்றோர் போற்றும் புலவர்களுள் ஒருவராகிய கவியரசர் கம்பர் பெருமானல் ஆக்கப்பெற்ற அரிய காவியம் இராமாயணம் ஆகும். சுவைகள் அனைத்துக்கும் நிலைக்களமாக விளங்கும் அப்பெருங்காவியத்தை ஆக்கி யுதவிய கம்பநாடரின் பெருமையினைத் தமிழுலகமேயன்றி, ஏனைக் கவியுலகங்களும் கண்டுணர்ந்து கொண்டாடுகின்றன. ‘கல்விசிறந்த தமிழ்நாடு-புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று பாடிய கவிஞர் பாரதியாரின் கவிநயம் எண்ணியெண்ணி இன்புறுதற்கு உரியதாகும்.

அரசகேசரியின் பாராட்டு

ஓர் உயர்ந்த கவியின் இயல்பை அளத்தற்கு மற்றொரு கவியுள்ளமே சிறந்த கருவியாகும். அம்முறையில் இரகுவமிசம் என்னும் பெருங்காவியத்தை அருந்தமிழிற் பாடிய அரசகேசரி என்னும் புலவர்,

“கற்றார் கல்வியிற் பெரிதாந் தமிழ்க்கம்ப நாடன்
உற்றாங் குரைத்தான் உரையாதன ஓது நிற்பாம்”

என்று கவியரசராகிய கம்பர் பெருமையில் ஈடுபட்டுப் பாராட்டுவாராயினர்.

மூவகை நான்முறை

உயர்ந்த கருத்துக்களை எடுத்துரைத்துக் கேட்போரைச் செயற்படுத்தும் நெறியில் ஒரு பொருளை மறைநூல் கூறுதல், தலைவன் தன் பணியாளனுக்கிடும் கட்டளையினையொக்கும். அதனையே அறநூல்