உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியும் நடுவும் 31 சிறிதும் பொருட்படுத்தமாட்டார்கள். அத்தகையார் செய்யும் உதவிக்கு மண்ணேயும் விண்ணேயும் கைம் மாருக வழங்கிலுைம் ஈடுசெய்ய ஒண்னுமோ என்று உரைப்பார் திருவள்ளுவர். ஒருவனுக்கு உயிர் நீங்கும் இறுதி எல்லேயில் ஒரு சிறு உதவியைச் செய்தால் அவன் உயிர் காக்கப் படும். அத்தகைய நிலையில் வேண்டுவதாகிய சிற்று கவியை ஒருவன் செய்தான். அக்க உதவி மிகச் சிறியதேயாயினும் காலத்தைநோக்க, ஞாலத் தினும் மிகப் பெரிது என்மூர் அம்மேககு புலவர். ஒருவனுக்கு உதவி செய்பவன், இவனுக்கு இது செய்தால் நமக்கு இன்ன பயன் விளையும் என்று எண்ணிப் பார்த்து உதவுதல் தகாது. அத்தகைய ஆய்வின்றிச் செய்த உதவியின் நலம், கடலைக் காட்டினும் பெரிதாகும் என்று கட்டுரைத்தார் தெய்வப் புலவர். இக் கருத்துக்களை விளக்கும் அவரது, காலத்தி குற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.” பயன்துரக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது.” என்னும் வாய்மொழிகள் நன்றியின் நலத்தை நன்கு புலப்படுத்துவனவாகும். சுவையான பண்டங்களை நாவிற்கு எடுத்து கல்கும் கை, தன்னை அந்நாப் புகழும் என்று எண்ணுவதில்லையன்ருே தென்னை மரத்தின் அடி யில் அங்கணத்து நீரைப் பாய்ச்சிலுைம் அஃது அருஞ்சுவை இளநீரைத் தலையால் தாங்கித் தந்துதவும் செயலைக் கண்ணுரக் காணுகின்ருேம். இக் காட்சியை