பக்கம்:பாரதி லீலை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமரசம் எங்கே? ஜாதி மதங்களைப் பாரோம்-உயர் ஜன்மமித் தேசத்தில் எய்தினராயின் வேதிய ராயினும் ஒன்றே-அன்றி வேறு குலத்தவ ராயினும் ஒன்றே. மேடைப் பிரசங்கிகள் சிலர் உண்டு. பிரசங்க மேடைமீது கின்று சரமாரியாக அவர் சமரச போதனே செய்வார். மேடையை விட்டுக் கீழே இறங்கியதும் அவரது சமரச உணர்ச்சி ஒடி விடும். ஆனல் பாரதி அப்படிப்பட்டவ ரன்று. சாதி மத பேதங் கருதக் கூடாதென்பது பாரதி பாரின் கொள்கை. அதையே அவர் தமது பாட் டிலே முழக்கி யிருக்கிருர். சிலர் சொல்வர். சொல்கிறபடி செய்ய மாட்டார் ; சிலருக்கு மனது வராது. பாரதிக்கு யாரா யிருந்தாலும் கவலையில்லை. சுத்தமா யிருந்து அவர் மனதுக்குப் பிடித்திருக் தால் அவரிடமிருந்து வற்புறுத்தி வாங்கித் தின் பார். ஒரு சிறு விஷயம் பாருங்கள்: நண்பர் ஒருவர் தினமும் ஆபீஸ்-க்குத் தயிர் சாதம் கொண்டு வருவார். அவர் வேறு ஜாதி யினர்; பாரதி வேறு ஜாதி. இருந்தாலும் பார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/45&oldid=816564" இலிருந்து மீள்விக்கப்பட்டது