பக்கம்:பாரதி லீலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலாமடல் சுமார் 250 வருஷங்களுக்கு முன்பு எட்டய புரம் சமஸ்தான வித்துவானுக, கடிகை முத்துப் புலவர் என்று ஒருவர் இருந்தார். பெத்தண்ண தளவாய், உமறு புலவர், ஆகியவர்கள் அவ ரது சிஷ்யர்கள். பெத்தண்ணதளவாய் எட்டய புத்தவர் மீது ஒர் உலாமடல் " பாடி யிருக்கிருர். அந்த உலாமடல் மிக்க சொல் நயம் பொருள் ஈயம் சிறந்து விளங்குவது ; அந்த மாதிரி யாராலும் பாடமுடியாது என்று புகழப் படுவது. இவ்வாறு பலரும் அந்த உலாமடலப் புகழக் கேட்ட பாரதியார் சுமார் 200 வரிகள் அதே மாதிரி ஒர் அழகான உலாமடல் ” பாடி ஞர். பாடி, அதைச் சபையோர்முன் படித்துக் காண்பித்தார். அது மிகவும் நன்ருயிருந்தது. ஆனல் சில புலவர்கள் பொருமை மிகுதியினலே ராஜசபையில் புகுத்த மனமில்லா கிருந்தது கண்டு பாரதியாருக்குக் கோபம் வந்தது. அவர்கள் முன்னிலையிலேயே அதைக் கிழித்தெறிந்து போட்டு வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/30&oldid=816548" இலிருந்து மீள்விக்கப்பட்டது