பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46


மூட்ட வேண்டும் என்கிற ஆர்வத்துடனேயே கூடி வந்திருந் தனர்.

இவர்களுக்கெல்லாம் நன்றி கூறி, வரவேற்றுப் பேச எழுந்தான் பாபு:

'தலைமை வகிக்கும் மதிப்பிற்குரிய வார்டன் பிரசாத் அவர்களே, என்பால் மட்டற்ற அன்பும், பாசமும் கொண்

டுள்ள பிரியமுள்ள நண்பர்களே வணக்கம்.

நெருக்கடியான நேரத்தில் ஒர் அவசர நிமித்தம் உடடினயாக நான் ஒரு கூட்டத்தைக் கூட்டி உங்களை

வரவழைத்திருக்கிறேன். உங்கள் மத்தியில் என்னை வேதனைப்படுத்தும் எண்ணங்களைக் கொட்டி, அன்பும் சத்தியமும் நிலைத்திருக்கும் வரை பண்பும், பாசமும்

பிளவுபடாமல் என்னை நான் உங்களுக்குத் தொடர்ந்து தொண்டு செய்யத் தகுதியுள்ளவனுக ஆக்சிக் கொள்ள வேண்டுமென்கிற மனச் சாட்சியின் நிர்ப்பந்தமே உங்களை நான் இத்தனை அவசரமாகச் சந்திக்க அழைத்ததின் காரணம்.

விட்டுச் சண்டை விதிச் சண்டையாகி ஊர்ச் சண்டை யாக வளர்ந்தது போல் ஹாஸ்டலில் ஏற்பட்ட ஒரு ரகளே, என்னையும் வார்டனையும் மீறி முதல்வரின் கைக்குப் போகும் படியான ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டது. இது வருந்தத்தக்கதாகும்.

தன் பணியைச் செய்து ஊதியம் பெறும் சர்வர் சுப்பையா, ஹாஸ்டல் வேலைக்குத்தான் வந்திருக்கிருரே தவிர, பிறரால் அநியாயமாக அடிக்கப்படுவதற்காக எடுத்த பிறவி அல்ல. அதே போல, ஹாஸ்டலில் இடம் பெற்றுள்ள விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் மாணவர் களின் உபயோகத்திற்காக வாங்கி வைக்கப்பட்டுள்ள வையே அன்றி, சிலரின் கோபதாபங்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டி போட்டு உடைப்பதற்காக வாங்கி வைக்கப் பட்டவை அல்ல. ’