பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இல்லற இயல்பு Ho:

வேண்டிய பொறுப்பு இல்லறத்தானைச் சார்ந்ததே ஆகும். சில காலம் சிலரை ஆதரித்து வக்கவர் திடுமெனக் கைவிட வும் சேரும். அப்பொழுது ஆதரிக்கப்பட்டவர் அல்லல்பட நேரிடும். அந்தக் காலத்திலும் அப்படித் திடுமெனக் கைவிடப்பட்டவர்களையும் ஆகசிக்க வேண்டியது இல்லறத் தாரே ஆவார். உணவின்றி வருந்தும் ஏழை எளியவர்கட்கு உணவும் கொடுத்து உதவுபவரும் இல்லறத்தாரே என்க.

இல்லற நெறியினர் பிதுர்க்கடன் புரிவது இன்றியமை யாதது. பிதிர்க்கள் என்பவர் பிரமனுல் படைக்கப்பட்ட ஒருவகைத் தெய்வ இனத்தார் ஆவார். இவர்கள் இருப் விடம் தென் திசை என்பது அறிஞர் துணிபு. இதன் கருதியே வள்ளுவரும் இவர்களைத் தென்புலத்தார் என்றே குறிப்பிட்டுள்ளார். தெய்வத்தையும் மறத்தல் கூடாது. முன்பின் தெரியாமல் புதிதாக வந்து உதவியை காடியவர் கட்கும் உதவுதல் வேண்டும். உறவினர்கள் ஏழைகளாயின் அவர்களது ஏழ்மையை அகற்றி ஆதாவு காட்ட வேண்டும் தன்மையும் யாதோர் இடையூற்றிற்கும் இடக் சுருகல் இன்றிக் காத்துக்கொள்ளுதல் வேண்டும். தம்மை பும் காத்துக் கொண்டால்தானே பிறரையும் காக்க இயலும்.

இல்லறத்தார் பொறுப்பு மிகுதியாதலின் பொருள் தேடுதல் அவர்கட்கு இன்றியமையாததாகும். ஆளுல் அப்படிப் பொருளைத் தேடும் காலத்தும் பழிப்புக்கு இடம் கரும் வழிகளில் பொருளைத் தேடாமல், கல்வழியில் அப் பொருளைத் திரட்டித் தம் உதவி வேண்டி கின்ற முன் சொல்லப்பட்டவர்கட்கு உதவி புரிதல் நலம் தரும் செய லாகும். இப்படிப் பழிக்கு அஞ்சிப் பகுத்து உண்டுவரும் இல்லறத்தாரின் வாழ்வு எக்காலத்தும் அழியக் கூடிய

தி-2.