இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிதம்பரனார்
97
ஆயினும் என் ஆசைக் குழந்தையை - தேசக் கப்பலை இத் துறைமுகத்தில் காணாது ஆறாத் துயருற்றேன். 'பட்ட பாடெல்லாம் பயனற்றுப் போயிற்றே' என்று பரிதவித்தேன். 'என்று வருமோ நற்காலம்' என்று ஏங்கினேன். இன்று இல்லாவிட்டாலும் என்றேனும் சுதந்தரம் வந்தே தீரும். வீரசுதந்தர வெள்ளம் புறப்பட்டு விட்டது. அதைத் தடுத்து நிறுத்த யாரால் ஆகும்? பாரத நாட்டிலே,
" பாயக் காண்பது சுதந்தர வெள்ளம்
பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்"
என்று நாம் பாடும் நாள் எந்நாளோ?" என்று உருக்கமாகப் பேசிக் கடற்கரையை விட்டகன்றார் வீர சிதம்பரனார்.