உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கடற்கரையினிலே.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



11. கண்டி மன்னன்

லங்கை என்று வழங்கும் ஈழநாடு இயற்கை வளம் வாய்ந்த நாடு. அங்க சிங்களவரோடு தமிழரும் தொன்று தொட்டு வாழ்ந்து வருகின்றார்கள். பரராஜசிங்கன் என்ற அரசன் அந்நாட்டை ஆண்டுவந்த காலத்தில் கடுமையான பஞ்சம் வந்துற்றது. பசியின் கொடுமையால் குடிகள் படாத பாடு பட்டனர். மன்னன் மனம் பதைத்து வாடினான்; காவிரி நாட்டை நோக்கினான்; தடையின்றிக் கொடுக்கும் தகைமை வாய்ந்த சடையப்ப வள்ளலின் உதவியை நாடினான். உடனே அவர் களஞ்சியத்திலிருந்து நெல் கப்பலேறியது; யாழ்ப்பாணத்துறையில் வந்து மலைபோற் குவித்தது. அதைக் கண்டான் அரசன்; கடற்கரையில் நின்று! களிப்புடன் பேசலுற்றான் :

"தென் இலங்கைத் திருநகரே ! சிங்களரும் தமிழரும் சேர்ந்து வாழும் இந்நாட்டில் என்றும் இல்லாத பஞ்சம் இன்று வந்து சேர்ந்தது. மாதம் மூன்று மழையுள்ள நாட்டில் பத்து மாதமாக ஒரு துளி மழையில்லையே! பயிர் முகம் காட்டும் கழனிகள் எல்லாம் பாழடைந்து கிடக்கின்றன. வாழும் உயிர்கள் எல்லாம் வற்றி உலர்ந்து வானத்தையே நோக்கி நிற்கின்றன. காவலன் என்று பேர் படைத்த நான், நாடு படுந் துயரத்தைக் கண்டு நலிவுற்றேன்: கண்டி மாநகரிலுள்ள கண் கண்ட தெய்வமாகிய கண்ணகியை வேண்டினேன். 'தாயே ! பத்தினிப் பெண்டிர்

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/51&oldid=1247629" இலிருந்து மீள்விக்கப்பட்டது