உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

2. (உ-ம்) அரும்பு, முகை, போது, மலர்.

இச் சொற்கள் பொதுவாகப் பூவை உணர்த் தும். ஆகையால், இவை ஒரு பொருள் குறித்த பல சொற்களாம், ஆலை மலராக பூவை அரும்பு என்றும்; முகிழ்த்த பூவை முகை என்றும், மலரும பருவத்துப் பூவைப் போது என்றும், மலர்ந்த பூவை மலர் என்றும் உரைப்பதே முறையாகும்.

இவ்வாறே பாடபுத்தகங்களில் வரும் ஒரு பொருள் குறித்த பல சொற்கள் ஒவ்வொன்றும் அட்பமாக வேறுபடுதலைக் கேட்டறிந்து குறித்துக் கொள்ளவும்.

பயிற்சி

1. பின்வரும் பெயர்ச்சொற்களே வகைப்படுத்தி எழுதுக:

பலகை, நாற்காலி, மயிலாப்பூர், வருகை, வறுமை, திங்கட்கிழமை, சீர்காழி, பகல், கை, தோள், செய்தல், இறக்குமதி, ஒட்டம், திருப்போருர், இரவு. அருமை.

பொருட் இடப் காலப் சினைப் பெயர் பெயர் பெயர் Թւյաn

பண்புப் தொழிற் } பெயர் Qւյաn